செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா வலிமை’யுடன் மோதும் விஷால்

வலிமை’யுடன் மோதும் விஷால்

1 minutes read

அஜித் நடிக்கும் ‘வலிமை’ படத்துடன் விஷால் நடிப்பில் தயாராகி இருக்கும் ‘வீரமே வாகை சூடும்’ படமும் வெளியாகவிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

அறிமுக இயக்குநர் து. ப. சரவணன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் படம் ‘வீரமே வாகை சூடும்’. நடிகர் விஷால் தயாரித்து, கதையின் நாயகனாக நடித்திருக்கும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக பொலிவுட் நடிகை டிம்பிள் ஹயாத்தி நடித்திருக்கிறார். படப்பிடிப்பு நிறைவடைந்து இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த திரைப்படம் இம்மாதம் 26ஆம் திகதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பொங்கல் திருநாளான ஜனவரி 14ஆம் திகதியன்று வீரமே வாகை சூடும் வெளியாகும் என தெரிய வருகிறது.

கொரோனா பரவல் காரணமாக ஜனவரி 7 ஆம் திகதியன்று வெளியாகவிருந்த ராஜமௌலியின் ‘ஆர். ஆர். ஆர்’ என்ற படமும், ஜனவரி 14ஆம் திகதியன்று வெளியாகவிருந்த நடிகர் பிரபாஸின் ‘ ராதே ஷ்யாம்’ என்ற படமும் வெளியீட்டில் இருந்து பின்வாங்கி இருப்பதால், அந்த திகதியில் விஷாலின் வீரமே வாகை சூடும் படத்தை வெளியிடுவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் அஜித் நடிக்கும் ‘வலிமை’ திரைப்படம் ஜனவரி மாதம் 13ஆம் திகதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து ஜனவரி மாதம் 14ஆம் திகதி விஷாலின் வீரமே வாகை சூடும் வெளியாகக் கூடும்.

2013ஆம் ஆண்டு தீபாவளி திருநாளன்று விஷால் நடிப்பில் ‘பாண்டியநாடு’ என்ற திரைப்படமும், அஜித் குமார் நடிப்பில் ‘ஆரம்பம்’ என்ற திரைப்படமும் ஒரே திகதியில் வெளியானது. இதில் ‘பாண்டியநாடு’ படம் பெரிய வெற்றியைப் பெற்றது என்பது கவனிக்கத்தக்கது. இதன் மூலம் எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அஜித் குமாரும், விஷாலும் ஒரே திகதியில் ரசிகர்களை திரையில் சந்திக்கிறார்கள். இதில் யார் ரசிகர்களின் மனதை வெல்கிறார் என்பது பெரும் கேள்விக்குறியாக உருவாகியிருக்கிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.