செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா நடிகர் சோனு சூட்டின் தங்கை காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்

நடிகர் சோனு சூட்டின் தங்கை காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்

1 minutes read

பஞ்சாப்பில் வரும் பிப்ரவரி 14-ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மாளவிகா சூட் மோகா தொகுதியில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகர் சோனு சூட்டின் தங்கை காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்

நடிகர் சோனு சூட், தமிழ், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்து பிரபலமடைந்தவர். முதன்முறை கொரோனா ஊரடங்கு விதிக்கப்பட்டபோது, புலம்பெயர் தொழிலாளர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கு உதவி செய்ததில் அனைவரது பாராட்டையும் பெற்றார்.

இதையடுத்து கடந்த வருடம் இந்திய தேர்தல் ஆணையம், சோனு சூட்டை பஞ்சாப் மாநிலத்தின் அடையாள சின்னமாக அறிவித்தது.

இந்நிலையில் நேற்று முன்தினம் பஞ்சாப் தேர்தல் ஆணையம், சோனு சூட் பஞ்சாப் மாநிலத்தின் அடையாளம் சின்னமாக நியமிக்கப்பட்டதை திரும்ப பெறுவதாக அறிவித்தது. இதுகுறித்து சோனு சூட் தெரிவித்தபோது, தனது தங்கை மாளவிகா சூட் தேர்தலில் போட்டியிடுவதால், பஞ்சாப் மாநிலத்தின் அடையாளம் சின்னம் என்ற பொறுப்பிலிருந்து தானாக முன்வந்து விளங்குவதாக கூறினார்.

இந்நிலையில் இன்று சோனு சூட்டின் தங்கை மாளவிகா சூட், காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அவரை வீட்டில் சந்தித்த பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் வாழ்த்து தெரிவித்தார்.

நவ்ஜோத் சிங்குடன் சோனு சூட், மாளவிகா சூட்

இதுகுறித்து பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி கூறுகையில், சோனு சூட் அவரது மனிததன்மைக்கும், அன்பிற்கும் பெயர் போனவர். அவரது பெயரை உலகம் அறியும். இன்று அவரது குடும்பத்தில் இருந்து ஒருவர் காங்கிரஸில் இணைந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது என கூறினார்.

பஞ்சாப்பில் வரும் பிப்ரவரி 14-ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மாளவிகா சூட் மோகா தொகுதியில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.