நடிகர் சரத்குமார் நடிப்பில் தயாராகி இருக்கும் ‘இரை’ என்ற வலைத்தள தொடரின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது.
இதனை நடிகர் ஜெயம் ரவி தன்னுடைய இணையப்பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.

‘தூங்காவனம்’, ‘கடாரம் கொண்டான்’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ராஜேஷ் எம் செல்வா இயக்கத்தில் தயாராகியிருக்கும் முதல் வலைதள தொடர் ‘இரை’.
இதில் ‘சுப்ரீம் ஸ்டார்’ சரத்குமார் கதையின் நாயகனாக நடிக்கிறார்.

இவருடன் நிழல்கள் ரவி, அபிஷேக் சங்கர், ஸ்ரீ கிருஷ்ண தயாள், கௌரி நாயர், சிரிஷா, ஸ்ரீரஞ்சனி பிரபு, ரித்திகா சீனிவாசன், வான்மதி, கோகுல் ஆனந்த் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
எஸ் யுவா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார்.
தமிழில் புதிதாக அறிமுகமாகியிருக்கும் ஆஹா என்ற டிஜிட்டல் தளத்திற்காக இந்த வலைதளத் தொடரை நடிகை ராதிகா சரத்குமாரின் ராடான் நிறுவனம் தயாரித்திருக்கிறது.
கடந்த ஆண்டு இந்த வலைதள தொடரின் படப்பிடிப்பு தொடங்கியது, தற்போது இந்த வலைதள தொடரின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து இதன் டீஸர் வெளியாகி இருக்கிறது.
‘இரை’ டீஸரில் கிரைம் திரில்லர் தொடராக உருவாகி இருப்பதால், இணையவாசிகளின் வரவேற்பு எதிர்பார்ப்பை விட கூடுதலாக கிடைத்து வருகிறது.