செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா சாதனை சிகரத்தைத் தொட்ட ‘அரபிக் குத்து’

சாதனை சிகரத்தைத் தொட்ட ‘அரபிக் குத்து’

1 minutes read

நடிகர் விஜய் நடிப்பில் தயாராகி இருக்கும் ‘பீஸ்ட்’ படத்தில் இடம்பெற்ற ‘அரபிக் குத்து’ பாணியிலான பாடல் வெளியான 24 மணி நேரத்தில் 20 மில்லியனுக்கு மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு புதிய சாதனையை படைத்திருக்கிறது.

சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘பீஸ்ட்’. இதில் நடிகர் விஜய் கதையின் நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருக்கிறார். அனிருத் இசையமைத்திருக்கும் இந்தப் படத்தின் சிங்கிள் ட்ராக் காதலர் தினத்தை முன்னிட்டு நேற்று மாலை இணையத்தில் வெளியானது. அரபி குத்து பாணியிலான இந்தப் பாடல் வெளியானதும் விஜயின் ரசிகர்கள் இணையத்தில் கொண்டாடினர்.

நடிகர் சிவகார்த்திகேயன் பாடல் வரிகளை எழுதியிருக்க அனிருத் ஜொனிதா காந்தி பின்னணி பாடியிருக்கிறார். அனிரூத் இசையில் ‘மலாம பிதா பிதாதே.. ‘ எனத் தொடங்கும் இந்த பாடலுக்கு ரசிகர்கள் பெரும் வரவேற்பு அளித்திருக்கிறார்கள். இந்த பாடல் வெளியான 24 மணி நேரத்திற்குள் 23மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு புதிய சாதனையை படைத்து வருகிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.