செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா நடிகர் ஜீவா படத்தின் புதிய அப்டேட் | உற்சாகத்தில் ரசிகர்கள்

நடிகர் ஜீவா படத்தின் புதிய அப்டேட் | உற்சாகத்தில் ரசிகர்கள்

1 minutes read

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் ஜீவா படத்தின் அப்டேட் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் காமெடி கலந்த கதாநாயக கதாப்பாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர்கள் நடிகர் ஜீவா மற்றும் சிவா. தற்போது இவர்கள் இருவரும் இணைந்து ‘கோல்மால்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றனர். இந்த திரைப்படத்தை இயக்குனர் பொன்குமரன் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் பயல்ராஜ்புட், தன்யா ஹோப், மாளவிகா, யோகிபாபு, வையாபுரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

கோல்மால் திரைப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் மொரிசியசில் வைத்து படமாக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கோல்மால் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டதாக படக்குழு தெரிவித்துள்ளது. மேலும் படப்பிடிப்பின் இறுதிநாளில் எடுத்த புகைப்படங்களை படக்குழு பகிர்ந்துள்ளது. இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கோல்மால் படக்குழு

கோல்மால் திரைப்படத்தில் பிறரை ஏமாற்றி வாழும் கதாபாத்திரங்களாக நடிகர் ஜீவா மற்றும் சிவா நடித்துள்ளனர். அவர்களின் வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்பதை படத்தின் தொடக்க முதல் முடிவு வரை காமெடியாக சொல்வது தான் கோல்மால் திரைப்படம் என்று படக்குழு தெரிவித்துள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.