Saturday, May 4, 2024

புகைப்படத் தொகுப்பு

Home சினிமாஇயக்குனர்கள் என் கதாபாத்திரத்தில் தனுஷ் நடிப்பார் | நடிகர் பார்த்திபன்

என் கதாபாத்திரத்தில் தனுஷ் நடிப்பார் | நடிகர் பார்த்திபன்

1 minutes read
  • பொன்னியின் செல்வன் -1 திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது.
  • இந்த படத்தை நடிகர் பார்த்திபன் தஞ்சையில் உள்ள ஒரு திரையரங்கில் பார்த்துள்ளார்.

இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனரான மணிரத்னம் இயக்கத்தில் முன்னணி நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

பொன்னியின் செல்வன்

இதைத்தொடர்ந்து நடிகர் பார்த்திபன் தஞ்சையில் உள்ள ஒரு திரையரங்கில் இன்று அதிகாலை ரசிகர்களுடன் படம் பார்த்துள்ளார். பின்னர் தஞ்சை பெரிய கோவிலுக்கு சென்று வழிபட்ட அவர் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

பொன்னியின் செல்வன்

அதில் பார்த்திபன் கூறியதாவது, “ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகத்தில் தனுஷ் நடிக்கவுள்ளார் என்பது இயக்குனர் செல்வராகவன் கூறியது. அந்த படத்தின் முதல் பாகத்தில் தனுஷ் நடிக்க இருப்பதாக இருந்தது. ஆனால் தனுஷிற்கு பதிலாக நான் நடித்தேன். இப்பொழுது என் கதாபாத்திரத்தில் தனுஷ் நடிக்கவுள்ளார். அவர் நடித்தால் மிகவும் சிறப்பாகவே இருக்கும்” என்று கூறினார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More