செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா ‘சியான் 61’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்?

‘சியான் 61’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்?

1 minutes read

மணிரத்னம் இயக்கத்தில் சில தினங்களுக்கு முன்பு வெளியான பொன்னியின் செல்வன்-1 திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், பிரகாஷ் ராஜ், சரத்குமார், பார்த்திபன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

இதில் விக்ரம் நடித்த ஆதித்த கரிகாலன் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து, பா. ரஞ்சித் இயக்கும் படத்தில் விக்ரம் நடிக்க போவதாக அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்திருந்தது. ‘சியான் 61’ என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் சார்பில் கே.இ.ஞானவேல்ராஜா, நீலம் ப்ரொடக்ஷன்ஸ் உடன் இணைந்து தயாரிக்கிறார்.

இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படத்தின் பூஜை அண்மையில் நடைபெற்றது. இந்நிலையில், ‘சியான் 61’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விரைவில் வெளியாகவுள்ளதாகவும் இதன் டெஸ்ட் ஷூட் நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பொன்னியின் செல்வன் வெற்றியைத் தொடர்ந்து ‘சியான் 61’ படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.