Sunday, April 28, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா சென்னையில் ஷூட்டிங்.. | அஜித்தை காண குவிந்த ரசிகர்கள்..

சென்னையில் ஷூட்டிங்.. | அஜித்தை காண குவிந்த ரசிகர்கள்..

1 minutes read

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் “துணிவு”. இப்படத்தின் முதல் மற்றும் இரண்டாம் தோற்ற போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. இந்த படம் வங்கி கொள்ளையை மையமாக வைத்து தயாராவதாக ஏற்கனவே கூறப்பட்ட நிலையில், உண்மை கதையில் அஜித் நடித்து வருவதாக தகவல் வெளியானது.

இதில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். “துணிவு” திரைப்படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், சென்னையில் நடைபெறும் துணிவு திரைப்பட படப்பிடிப்பின் வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

அதன்படி, சென்னை, அண்ணாசலையில் உள்ள எல்.ஐ.சி கட்டிடம் அருகே துணிவு திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதில் அஜித் – மஞ்சு வாரியர் பங்கு பெறும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. இதைத்தொடர்ந்து அஜித்தை காண ரசிகர்கள் பலர் அங்கு குவிந்துள்ளனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More