Wednesday, April 24, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா நடிகை பிரியாமணியின் ‘Dr. 56’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

நடிகை பிரியாமணியின் ‘Dr. 56’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

1 minutes read

நடிகை பிரியாமணி கதையின் நாயகியாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘Dr 56’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.

இதனை ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி தன்னுடைய இணைய பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.

இயக்குநர் ராஜேஷ் ஆனந்த்லீலா இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘Dr 56’. இதில் நடிகை பிரியாமணி கதையின் நாயகியாக நடித்திருக்கிறார்.

இவருடன் நடிகர்கள் தீபக், பிரவீண் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கதை, திரைக்கதையை எழுதி படத்தை தயாரித்திருக்கிறார் டி பிரவீன் ரெட்டி. படத்திற்கு பாடல்களை எழுதியதுடன் வசனங்களையும் எழுதி இருக்கிறார் ஷங்கர் ராமன்.

ராகேஷ் சி. திலக் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு நோபின் பால் இசையமைத்திருக்கிறார். சஸ்பென்ஸ் திரில்லர் ஜேனரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஹரிஹரா பிக்சர்ஸ் மற்றும் ஸ்ரீ லட்சுமி ஜோதி கிரியேசன்ஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் டொக்டர் ஏ. பி. நந்தினி மற்றும் ஏ. என். பாலாஜி ஆகியோர் தயாரித்திருக்கிறார்கள்.

கன்னடத்தில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் என ஏனைய தென்னிந்திய மொழிகளிலும் வெளியாகிறது.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து இறுதி கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.

பிரியாமணியின் அர்த்தமுள்ள தோற்றம், அவரின் பின்னணியில் இடம்பெற்றிருக்கும் பத்திரிக்கை செய்திகள், ‘Dr 56’ என்பது ‘டாக்டர் 56’ என்ற பொருள் தரும் வகையிலான வடிவமைப்பு, அதனுடன் 1956 முதல் 2019 என குறிப்பிடப்பட்டிருப்பதால், இந்த காலகட்டத்திற்குள் நிகழ்ந்த சம்பவங்களை இந்த படம் பேசுகிறது என உணர்த்தப்பட்டிருப்பதாலும் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More