December 7, 2023 12:31 am

அருண் விஜய் நடிக்கும் ‘வணங்கான்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

நடிகர் அருண் விஜய் நடிப்பில் தயாராகி வரும் ‘வணங்கான்’ எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.

சிறந்த இயக்குநருக்கான தேசிய விருது பெற்ற இயக்குநர் பாலா இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் ‘வணங்கான்’. இதில் அருண் விஜய், ரோஷினி பிரகாஷ், மிஷ்கின் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். ஆர்.பி. குருதேவ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். இந்த திரைப்படத்தை பாலாவின் சொந்த பட நிறுவனமான பி ஸ்டுடியோஸ் தயாரித்திருக்கிறது. இதனை சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் ப்ரொடக்ஷன்ஸ் வெளியிடுகிறது.

கன்னியாகுமரி, திருவண்ணாமலை ஆகிய பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று நிறைவடைந்திருக்கும் சூழலில் இதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. ஃபர்ஸ்ட் லுக்கில் அருண் விஜயின் தோற்றம் வித்தியாசமாக இருப்பதாலும், ஒரு கையில் தந்தை பெரியாரின் உருவ சிலையும், மற்றொரு கையில் விநாயகரின் திருவுருவ சிலையையும் அரவணைத்தவாறு தோன்றுவது.. ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இதனிடையே பாலாவின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘வணங்கான்’ திரைப்படத்தில் முதலில் நடிகர் சூர்யா நடித்தார் என்பதும், பிறகு பல்வேறு காரணங்களால் சூர்யா இப்படத்திலிருந்து விலகினார் என்பதும், சூர்யாவிற்கு பதிலாக அருண் விஜய் நடிப்பில் இப்படம் தயாராகி நிறைவடைந்திருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்