செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா சந்தானம் நடிக்கும் ‘வடக்குப்பட்டி ராமசாமி’ படத்தின் வெளியீட்டு திகதி அறிவிப்பு

சந்தானம் நடிக்கும் ‘வடக்குப்பட்டி ராமசாமி’ படத்தின் வெளியீட்டு திகதி அறிவிப்பு

1 minutes read

நடிகர் சந்தானம் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘வடக்குப்பட்டி ராமசாமி’ எனும் திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

‘டிக்கிலோனா’ எனும் திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் கார்த்திக் யோகி இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘வடக்குப்பட்டி ராமசாமி’. இதில் சந்தானம், மேகா ஆகாஷ், ஜோன் விஜய், நிழல்கள் ரவி, எம்.எஸ். பாஸ்கர், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

தீபக் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். ஏ. ராஜேஷ் கலை இயக்கத்தை கவனிக்க, படத்தொகுப்பு பணிகளை டி சிவாநந்தீஸ்வரன் மேற்கொண்டிருக்கிறார்.

நகைச்சுவையை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை பீப்பிள் மீடியா ஃபேக்டரி  பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் டி. ஜி. விஷ்வ பிரசாத் தயாரித்திருக்கிறார்.

இப்படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து வெளியீட்டிற்கு தயாரான நிலையில்.. தற்போது இப்படத்தின் வெளியீட்டு திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில் இந்த திரைப்படம் எதிர்வரும் பிப்ரவரி மாதம் இரண்டாம் திகதியன்று உலகம் முழுவதும் படமாளிகைகளில் வெளியாகிறது.

இதனிடையே கடந்த 2023 ஆம் ஆண்டில் நடிகர் சந்தானம் நடிப்பில் ‘டிடி ரிட்டன்ஸ்’, ‘கிக்’, ’80ஸ் பில்டப்’ என மூன்று படங்கள்  வெளியானது என்பதும், இதில் :டிடி ரிட்டன்ஸ்’ திரைப்படம் மட்டுமே வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பாரிய வெற்றியை பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது. ‌

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.