செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா படப்பிடிப்புடன் தொடங்கிய விஜய் ஆதிராஜின் ‘நொடிக்கு நொடி’

படப்பிடிப்புடன் தொடங்கிய விஜய் ஆதிராஜின் ‘நொடிக்கு நொடி’

0 minutes read

நடிகர்கள் அஸ்வின் குமார்- ஷ்யாம் – நரேன் ஆகியோர் கதையின் நாயகர்களாக அழுத்தமான வேடங்களில் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘நொடிக்கு நொடி’ என பெயரிடப்பட்டு, அதன் தொடக்க விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.

சின்னத்திரை நடிகராகவும், தொகுப்பாளராகவும், திரைப்பட இயக்குநராகவும் பிரபலமான நடிகர் விஜய் ஆதி ராஜ் இயக்கத்தில் உருவாகும் ‘நொடிக்கு நொடி’ எனும் திரைப்படத்தில் அஸ்வின் குமார், ஷியாம், நரேன், நம்ரிதா , அபிராமி வெங்கடாச்சலம், மேகா ராஜன், சென்றாயன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். கோபிநாத் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு அம்ரேஷ் இசையமைக்கிறார். இந்த திரைப்படத்தை நாக்ஸ் ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆரோக்கியதாஸ் தயாரிக்கிறார்.

‘புத்தகம்’ எனும் திரைப்படத்தை தொடர்ந்து விஜய் ஆதிராஜ் இயக்கத்தில் ‘நொடிக்கு நொடி’ எனும் எக்சன் திரைப்படம் உருவாகுவதாலும், சுவாரசியமான திரில்லராக தயாராவதாலும் இப்படத்திற்கு ரசிகர்களிடத்தில் எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.