செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா நடிகர் புகழ் நடிக்கும் ‘ஃபோர் சிக்னல்’

நடிகர் புகழ் நடிக்கும் ‘ஃபோர் சிக்னல்’

1 minutes read

சின்னத்திரை நட்சத்திரமும், திரைப்பட நகைச்சுவை நடிகருமான புகழ் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘ஃபோர் சிக்னல்’ என பெயரிடப்பட்டிருக்கிறது.

அறிமுக இயக்குநர் மகேஸ்வரன் கேசவன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘ஃபோர் சிக்னல்’ எனும் திரைப்படத்தில் புகழ், அருவி திருநாவுக்கரசு, கல்லூரி வினோத், லொள்ளு சபா சேஷு, சர்மிளா, விஜய் ஆதி ராஜ், யூட்யூபர் காத்து கருப்பு கலை உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பாலா பழனியப்பன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஏ ஜே அலிமிர்சாக் இசையமைத்திருக்கிறார். இந்த திரைப்படத்தை  ஸ்ரீ லக்ஷ்மி சண்முகநாதம் பிலிம்ஸ் மற்றும் கேசவ் புரொடக்ஷன்ஸ் ஆகிய பட தயாரிப்பு நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் ஆர். எஸ். மணிகண்டன் மற்றும் இயக்குநர் மகேஸ்வரன் கேசவன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ” சென்னை போன்ற மாநகரில் மக்களின் போக்குவரத்திற்கு பயன்படுத்தும் ஷேர் ஓட்டோ எனும் வாகனத்தை இயக்கும்  சாரதிக்கும், அந்த ஷேர் ஓட்டோவில் பயணிக்கும் பயணிகளுக்கும் இடையேயான சுவாரசியமான சம்பவங்களின் தொகுப்பாக இந்த ‘ஃபோர் சிக்னல்’ திரைப்படம் உருவாகி இருக்கிறது. மேலும் இந்த திரைப்படத்தை தீபாவளி வெளியீடாக வெளியிட திட்டமிட்டு வருகிறோம்” என்றார்.

இதனிடையே நடிகர் புகழ் கதையின் நாயகனாக அறிமுகமான ‘ஜூ கீப்பர்’ எனும் திரைப்படம் படமாளிகையில் வெளியாகும் என பல முறை அறிவிக்கப்பட்டும், திட்டமிட்டபடி வெளியாகவில்லை என்பதும், நேரடியாக தொலைக்காட்சியிலோ அல்லது டிஜிட்டல் தளத்திலோ வெளியாகவில்லை என்பதால், அவரது நடிப்பில் தயாராகும் ‘ஃபோர் சிக்னல்’ திரைப்படத்திற்கு திரையுலக வணிகர்களிடையே போதிய ஆதரவு இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.