Wednesday, April 24, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சமையல் கோதுமை பிஸ்கட் செய்முறை!

கோதுமை பிஸ்கட் செய்முறை!

2 minutes read

1 கப் கோதுமை மாவில் Soft-ஆன பிஸ்கட் செய்முறை:

பொதுவாக பிஸ்கட் என்றாலே அனைவருக்கும் பிடிக்கும். குழந்தைகள் பிஸ்கட்டை அதிகம் விரும்பி சாப்பிடுவார்கள். அனைவரும் விரும்பி சாப்பிட கூடிய இந்த பிஸ்கட்டினை வீட்டில் மிக எளிமையான இரண்டு செய்முறைகளில் எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம். அதுவும் கோதுமை மாவை பயன்படுத்திதான் நாம் கோதுமை பிஸ்கட் செய்யப்போகிறோம். பிஸ்கட் செய்வதற்கு மைக்ரோ ஓவன் தேவைப்படுமே என்று அதிகமாக யோசிக்க வேண்டாம்… இந்த கோதுமை பிஸ்கட்டினை அடுப்பில் வெறும் கடாயை பயன்படுத்தி தான் செய்ய போகிறோம்… இந்த கோதுமை பிஸ்கட் செய்ய மிகவும் குறைவான பொருள்களே தேவைப்படும். இந்த கோதுமை பிஸ்கட்டை வீட்டில் நீங்கள் ஒரு முறை செய்தால் போதும் அனைவரும் மீண்டும் மீண்டும் வேண்டும் என்று விரும்பி சாப்பிடுவார்கள்.  சரி கோதுமை பிஸ்கட் செய்ய தயாரா? முதலில் கோதுமை பிஸ்கட்செய்ய என்னென்ன பொருட்கள் தேவைப்படும் என்பதை பற்றி பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:-

  1. கோதுமை மாவு – 1 கப்
  2. சர்க்கரை பவுடர் – 1/2 கப்
  3. நெய் (அல்லது) வெண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
  4. பொரிப்பதற்கு எண்ணெய் தேவையான அளவு

செய்முறை விளக்கம்:-

ஸ்டேப்: 1

ஒரு சுத்தமான பவுலை எடுத்து கொள்ளுங்கள் அவற்றில் ஒரு கப் கோதுமை, சர்க்கரை பவுடர் 1/2 கப் மற்றும் ஒரு டேபிள் ஸ்பூன் நெய் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளுங்கள்.

ஸ்டேப்: 2

பின் கொஞ்சம், கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து கோதுமை மாவை சப்பாத்தி மாவு போல் பிசைந்து கொள்ளுங்கள். (குறிப்பு: இவற்றில் சர்க்கரை சேர்த்திருப்பதால் தண்ணீர் சேர்த்து பிசையும் போது மாவு இளகும், எனவே தண்ணீர் சேர்க்கும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.)

ஸ்டேப்: 3

wheat biscuit

கோதுமை மாவை பிசைந்த பின் 10 நிமிடங்கள் நன்றாக ஊறவைக்க வேண்டும், பின் சப்பாத்தி கட்டையில் பிசைந்த கோதுமை மாவை அப்படியே எடுத்து பெரிய உருண்டையாக உருட்டி ஓரளவு தடிமனாக தேய்த்து கொள்ளுங்கள். மேல் கட்டப்பட்டுள்ள படத்தில் உள்ளது போல் மாவினை தேய்த்து கொள்ளுங்கள்.

ஸ்டேப்: 4

wheat biscuit 3

 

பின் மேல் கட்டப்பட்டுள்ள படத்தில் உள்ளது போல் ஒரு சிறிய மூடியை எடுத்துக்கொள்ளுங்கள், பின் இந்த மூடியை பயன்படுத்தி தேய்த்த கோதுமை மாவை சிறு சிறு துண்டுகளாக கட் செய்த்து எடுத்துக்கொள்ளுங்கள்.

ஸ்டேப்: 5

பின் அடுப்பில் ஒரு கடாய் வைத்து அவற்றில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் நன்கு சூடேறியதும், அடுப்பை மிதமான சூட்டில் பிஸ்கட்டை வைத்து நன்றாக பொன்னிறமாகும் வரை பொரித்தெடுக்க வேண்டும். (குறிப்பு பிஸ்கட்டை எண்ணெயில் பொரிக்கும் போது அடிக்கடி பிஸ்கட்டினை கிளறிவிட வேண்டும்)

இவ்வாறு பொரித்தெடுத்தால் சுவையான கோதுமை பிஸ்கட் தயார்.

 

நன்றி : பொதுநலம்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More