கேழ்வரகு மினி இட்லி!

ragi idly

கேழ்வரகு மினி இட்லி

தேவையானவை:
கேழ்வரகு – ஒரு கப்
உளுந்து – கால் கப்
வெந்தயம் – ஒரு டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கேரட் துருவல் – கால் கப்

செய்முறை:
கேழ்வரகு, உளுந்து, வெந்தயம் இவற்றை சுத்தம் செய்து 4 மணி நேரம் ஊற விடவும். பிறகு கிரைண்டரில் போட்டு, நைசாக அரைத்து உப்பு சேர்த்துக் கலக்கி 8 மணி நேரம் புளிக்க விடவும்.

பிறகு அதனுடன் கேரட் துருவல் சேர்த்துக் கலந்து மினி இட்லித் தட்டில் மாவாக ஊற்றி, 8 நிமிடம் வேக வைத்து எடுத்தால், கேழ்வரகு மினி இட்லி தயார். சாம்பார், சட்னியுடன் இதைப் பரிமாறவும்.

குறிப்பு:
இங்கே சொல்லியிருக்கும் அளவுகளின்படி எடுத்தால், சிறுதானியத்தை ஒன்றாக ஊற வைத்து அரைத்துக் கொள்ளவும். அளவுகள் டபுளாகும்போது தனித்தனியாக ஊற வைத்து, ஒன்றாகவோ அல்லது தனித்தனியாகவோ அரைக்கலாம்.

ஆசிரியர்