வரகரிசி கொள்ளு அடை

varakarici-kollu-adai

வரகரிசி – கொள்ளு அடை

தேவையானவை:. வரகரிசி – 100 கிராம், கொள்ளு – 25 கிராம், துவரம்பருப்பு, கடலைப்பருப்பு இரண்டும் சேர்ந்து. – 50 கிராம், காய்ந்த மிளகாய். – 8, சீரகம், பெருங்காயம். – தேவையான அளவு, ஓமம் – சிறிதளவு, தேங்காய் எண்ணெய் – தேவையான அளவு, துருவிய கேரட் / கோஸ் /முருங்கைக் கீரை தளிர- நறுக்கியது – ஒரு சிறிய கப். உப்பு. – தேவையான அளவு.

செய்முறை: வரகரிசி மற்றும் கொள்ளுடன் காய்ந்த மிளகாய், சீரகம், உப்பு, பெருங்காயத் தூள், துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, ஓமம் என அனைத்தையும் சேர்த்து 5 மணி நேரம் ஊறவைக்கவும். கொரகொரவென அரைக்கவும். 2 மணி நேரம் கழித்து துருவிய கேரட் அல்லது நறுக்கிய கோஸ் /முருங்கைக் கீரை தளிர் இவற்றில் ஏதாவது ஒன்றை சேர்த்துக் கலந்து, தோசைக்கல்லை சூடாக்கி தேங்காய் எண்ணெய் விட்டு அடைகளாகச் சுட்டெடுக்கவும்.

ஆசிரியர்