சர்க்கரைவள்ளிக் கிழங்கு – அரை கிலோமிளகு தூள் – 1 டீஸ்பூன்சீரகத்தூள் – 1 டீஸ்பூன்சாட் மசாலாத்தூள் – சிறிதளவுஉப்பு – தேவைக்கு
செய்முறை:
சர்க்கரை வள்ளிக்கிழங்கை வேகவைத்து, தோல் நீக்கி சிறிய துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.
மிளகு தூள், சீரகத்தூள், உப்பு ஆகியவற்றை ஒன்றாக கலந்து வைக்கவும்.
நறுக்கிய சர்க்கரை வள்ளிக்கிழங்கை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் கலந்து வைத்துள்ள மிளகு தூள், சீரகத்தூள், உப்பு கலவையை சர்க்கரை வள்ளிக்கிழங்குகள் மீது தூவி நன்றாக கலக்கவும்.
கடைசியாக அதன் மீது சாட் மசாலா தூள் தூவி பரிமாறலாம்.