1
என்னென்ன தேவை?
பழுத்த பெங்களூர் தக்காளி – 3,
பெரிய வெங்காயம் – 1,
கொத்தமல்லித்தழை,
கறிவேப்பிலை – சிறிது,
மிளகுத்தூள் – 1 டீஸ்பூன்,
உப்பு – தேவைக்கு,
வெள்ளரிக்காய் – 1/2 துண்டு,
கேரட் – 1.
எப்படிச் செய்வது?
ஒரு அகலமான தட்டில் தக்காளி, வெங்காயம், கேரட், வெள்ளரிக்காயை பொடியாகவோ அல்லது வட்டமாகவோ நறுக்கிக் கொள்ளவும். அதனுடன் மிளகுத்தூள், உப்பு சேர்த்து நன்கு கலந்து, நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லியால் அலங்கரித்து பரிமாறவும்.