Thursday, March 28, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சமையல் சூப்பரான வரமிளகாய்த் துவையல்!

சூப்பரான வரமிளகாய்த் துவையல்!

1 minutes read

தேவையான பொருட்கள்
சிவப்பு மிளகாய் – 6,
சின்ன வெங்காயம் – 20,
தக்காளி – 1,
கறிவேப்பிலை – சிறிது,
எண்ணெய்,
உப்பு – தேவையான அளவு,
கடுகு – 1/2 டீஸ்பூன்,
உளுத்தம்பருப்பு – 1 டீஸ்பூன்,
பெருங்காயம் – 1/2 டீஸ்பூன்,
புளி – சிறிய நெல்லிக்காய் அளவு.

செய்முறை
சின்ன வெங்காயத்தை தோலுரித்துக் கொள்ளவும். தக்காளியை நறுக்கிக் கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணெய் சூடாக்கி அதில் கடுகு, உளுத்தம்
பருப்பு, பெருங்காயம், சிவப்பு மிளகாய், வெங்காயம், கறிவேப்பிலை, தக்காளி, புளி, உப்பு என்று ஒன்றன்பின் ஒன்றாகப் போட்டு நன்றாக வதக்கவும். வதக்கியதை ஆற வைத்து மிக்சியில் அரைக்கவும். கடைசியாக ஒரு தாளிக்கும் கரண்டியில் கடுகையும், கறிவேப்பிலையையும் தாளித்து துவையலில் போட்டு பரிமாறவும்.

குறிப்பு: எல்லாப் பொருட்களையும் பச்சையாக அரைத்து, கடைசியில் தாளித்து கொட்டி இறக்கலாம்.

நன்றி
தினகரன்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More