ப்ரோக்கோலி சத்துமிக்க உணவு வகைகளுள் ஒன்று. இதில் சூப், கிரேவி போன்றவற்றை சமைக்கலாம். சரி வாங்க சுவையான சீஸ் ப்ரோக்கோலி செய்வது குறித்து பார்க்கலாம்..
தேவையான பொருள்கள் :
நறுக்கிய ப்ரோக்கோலி – 1 கப்
ஆலிவ் எண்ணெய் – 1 ஸ்பூன்
இஞ்சி- சிறிதளவு
பூண்டு – 1 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
மிளகுத்தூள் – 1 ஸ்பூன்
சீஸ் – 2 துண்டுகள்.
செய்முறை :
இஞ்சி, பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
சீஸை துருவிக்கொள்ளவும்.
அடுப்பில் கடாயை வைத்து அதில் ஆலிவ் எண்ணெய் ஊற்றி இஞ்சி மற்றும் பூண்டை சேர்த்து நன்றாக வதக்கவும்.
சிறிதுநேரம் கழித்து ப்ரோக்கோலி, மிளகுத்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி விடவும்.
கடைசியில் துருவிய சீஸ் சேர்த்து ஐந்து நிமிடம் மூடி வைக்கவும்.
சூடான சீஸ் ப்ரோக்கோலி தயார்..
இதனை ஈவினிங் ஸ்நாக்ஸ் ஆக எடுத்துக்கொள்ளலாம். சுவையும் அதிகம்,சத்தும் அதிகம்…
உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.