என்னென்ன தேவை?
சின்ன வெங்காயம் – 1 கப்,
புளி – சிறிய நெல்லிக்காய் அளவு,
குழம்பு மிளகாய் பொடி – 1 டீஸ்பூன்,
ராகி மாவு – 1 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்,
உப்பு,
கடலை எண்ணெய் – தேவைக்கு,
கடுகு,
கறிவேப்பிலை – சிறிது,
காய்ந்தமிளகாய் – 1,
சர்க்கரை – சிறிது.
எப்படிச் செய்வது?
புளியை கரைத்து அதில் தோல் நீக்கிய முழு சின்ன வெங்காயம், குழம்பு மிளகாய் பொடி, மஞ்சள் தூள், உப்பு போட்டு வைக்கவும். கடாயில் எண்ணெயை காயவைத்து கடுகு, கறிவேப்பிலை, காய்ந்தமிளகாய் தாளித்து வெங்காயத்தோடு உள்ள புளித்தண்ணீரை சேர்த்து நன்றாக சுண்ட விடவும். கடைசியாக சர்க்கரை, ராகி மாவை சிறிது தண்ணீரில் கரைத்து ஊற்றி குழம்பு நன்றாக கொதித்ததும் இறக்கவும்.
சூப்பரான வெங்கயா குழம்பு ரெடி..
நன்றி-தினகரன்