என்னென்ன தேவை?
வறுத்த மட்டன் உருண்டை – 250 கிராம்,
சின்ன வெங்காயம்-4,
இடிச்சபூண்டு-3,
தக்காளி -2,
புளிக்கரைசல்,
மட்டன் மசாலா- 5 தேக்கரண்டி,
மிளகு- ½ தேக்கரண்டி,
சீரகம்- ½ தேக்கரண்டி,
தேங்காய்ப்பால்,
கொத்தமல்லி,
உப்பு சிறிது.
எப்படிச் செய்வது?
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு, அதில் மிளகு, சீரகம், சின்னவெங்காயம், இடிச்சப்பூண்டு, தக்காளி, புளிக்கரைசல், மட்டன் மசாலா சேர்த்து நன்கு வதக்கவும். பின்னர் அதில் மட்டன், உருண்டை, தண்ணீர், உப்பு சேர்த்து நன்கு கொதிக்கவிடவும். இறுதியாக தேங்காய்ப்பால் மற்றும் கொத்தமல்லி சேர்த்து இறக்கவும்.
நன்றி -தினகரன்