Wednesday, April 24, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சமையல் கொத்தமல்லி பருப்பு கூட்டு!

கொத்தமல்லி பருப்பு கூட்டு!

1 minutes read

தேவையான பொருட்கள்
கொத்தமல்லி – 1 கப்,
வெங்காயம் – 2,
உப்பு – தேவையான அளவு,
எண்ணெய் 2 டேபிள்ஸ்பூன்,
வேக வைத்த துவரம் பருப்பு – 1/4 கப்,
கடுகு – 1 டீஸ்பூன்,
உளுந்து – 1 டீஸ்பூன்.

அரைக்க…
தேங்காய்த் துருவல் – 1/4 கப்,
சீரகம் – 1 டீஸ்பூன்,
பச்சை மிளகாய் – 2.

செய்முறை

கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு போட்டு தாளித்த பின்னா வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் சற்று வதங்கியதும் கொத்தமல்லி, உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.

வதங்கிய பிறகு வேக வைத்த பருப்பு சேர்க்கவும்.

அரைக்க கொடுத்த பொருட்களை நன்கு அரைத்து அதை கொத்தமல்லி கலவையில் சேர்த்து, தேவைக்கேற்ப தண்ணீர் சேர்க்கவும்.

நன்கு கொதித்த பிறகு அடுப்பை அணைக்கவும்.

நன்றி-மாலை மலர்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More