Sunday, May 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சமையல் அரிசி பாயசம் செய்வது எப்படி?

அரிசி பாயசம் செய்வது எப்படி?

2 minutes read

முக்கிய பொருட்கள்
1 கப் அரிசி
6 pieces கோடுகளாக வெட்டி கொள்ள தேங்காய்
பிரதான உணவு
1 தேக்கரண்டி கலர் பொடி
1 கப் சீனி
2 தேக்கரண்டி நெய்
2 1/2 கப் நீர்
2 இலவங்கப்பட்ட இலை
தேவையான அளவு குங்குமப்பூ
1 கருவாப்பட்டை குச்சி
தேவையான அளவு உதிர்ந்த பிஸ்தா
தேவையான அளவு முந்திரி
தேவையான அளவு பொடியாக்கப்பட்ட ஏலக்காய்
தேவையான அளவு கிராம்பு
தேவையான அளவு உதிர்ந்த பாதாம்

Step 1:
அரிசியை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும். அரைத்த அரிசியை ஒரு கிண்ணத்தில் எடுத்து 10 முதல் 15 நிமிடங்கள் ஊற வைக்கவும்.

Step 2:
பாயசம் அடிபிடிக்காமல் இருக்க, ஒரு பானில் சிறிது தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். தண்ணீர் கொதிக்கத் தொடங்கியதும் அதில் பாலையும் சேர்த்து கொதிக்க விடவும்.

Step 3:
இப்போது அதில் குங்குமப்பூ இழைகளையும் சேர்த்து, பானில் அடி பிடிக்காமல் இருக்க, தொடர்ந்து கிளறி விட்டுக்கொண்டே இருக்கவும். அப்படியே 5 நிமிடங்கள் வரை வேகவிடவும்.

Step 4:
நாம் ஏற்கனவே ஊறவைத்த அரிசியிலிருந்து தண்ணீரை வடித்து கொதிக்கும் பாலில் அரைத்த அரிசியை சேர்த்து தொடர்ந்து கிளறிக்கொண்டே இருக்கவும். அரிசி முழுதாக வேகும் வரை 10 முதல் 15 நிமிடங்கள் வேகவிடவும்.

Step 5:
பால் கெட்டியாகத் தொடங்கியதும் சர்க்கரையைச் சேர்க்கவும். சர்க்கரை முழுவதுமாக கரைந்த பிறகு, முந்திரி, திராட்சை, பாதாம், ஒரு சிட்டிகை ஏலக்காய் பொடி ஆகியவற்றை சேர்க்கவும்.

Step 6:
2 முதல் 3 நிமிடங்கள் கொதிக்க வைத்த பின் அடுப்பை அணைத்து விடவும். இந்த சுவையான அரிசி பாயாசத்தை சூடாகவும் அல்லது ஃபிரிட்ஜில் வைத்து ஜில்லென்று குளிர்ச்சியாகவும் உங்கள் 2 முதல் 3 நிமிடங்கள் கொதிக்க வைத்த பின் அடுப்பை அணைத்து விடவும். இந்த சுவையான அரிசி பாயாசத்தை சூடாகவும் அல்லது ஃபிரிட்ஜில் வைத்து ஜில்லென்று குளிர்ச்சியாகவும் உங்கள் ரசனைக்கேற்ப பரிமாறலாம்.

நன்றி-தமிழ் நியூஸ்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More