செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சமையல் ஸ்பைசி ஃபிரை ஸ்நாக்ஸ்!

ஸ்பைசி ஃபிரை ஸ்நாக்ஸ்!

0 minutes read

தேவையான பொருட்கள்
சீரகத்தூள் – 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை – கால் கப்
காய்ந்த மிளகாய் – கால் கப்
வேர்க்கடலை – கால் கப்
பொட்டுக்கடலை – கால் கப்
அரிசி மாவு – 1 கப்
வறுத்த ரவை – கால் கப்
மைதா – கால் கப்
உப்பு – 1 டீஸ்பூன்
எண்ணெய், தண்ணீர் – தேவையான அளவு

செய்முறை

வாணலியில் கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய், வேர்க்கடலை ஆகியவற்றை தனித்தனியாக வறுத்து வைத்துகொள்ளவும்.

அவை அனைத்தையும் சூடு தணியும் வரை வைத்திருநது அத்துடன் பொட்டுக்கடலை சேர்த்து மிக்ஸியில் அரை குறையாக அரைத்து கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் அரைத்த பொடியுடன் சீரகத்தூள், அரிசி மாவு, மைதா மற்றும் உப்பு சேர்த்து கிளறவும். பின்னர் எண்ணெய்யை சூடு செய்து மாவுடன் கலந்து கிளற வேண்டும். அதில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து சப்பாததி மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும்.

அதை சப்பாத்தி போல் தேய்த்து விருப்பமான டிசைன்களில் மாவை துண்டித்து சூடான எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.

இப்போது சுவையான மொறுமொறுப்பான ஸ்பைசி ஃபிரை பரிமாறத்தயார்.

நன்றி -மாலை மலர்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.