Wednesday, April 24, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சமையல் சுவையான பலாக்காய் பிரியாணி..!

சுவையான பலாக்காய் பிரியாணி..!

1 minutes read

தேவையான பொருட்கள்
பாஸ்மதி அரிசி – 1/2 கிலோ,
பலாக்காய் – 1 (சிறியது),
Fried onion – 1 கப்,
மஞ்சள்,
உப்பு – தேவைக்கு,
பட்டை – 2,
கிராம்பு – 2,
சாகி ஜீரா – 1/2 டீஸ்பூன்,
ஏலக்காய் – 2,
பிரியாணி இலை – 2,
முந்திரி – 15,
எண்ணெய்,
நெய் – 1 கப்,
திராட்சை – 10 (உலர் திராட்சை),
பச்சை மிளகாய் – 4,
இஞ்சி, பூண்டு பேஸ்ட் – 3 டீஸ்பூன்,
உப்பு – தேவைக்கு.
புதினா,
கொத்தமல்லி – 1 கப்,
தயிர் – 1 கப்,
பிரியாணி மசாலா – 1½ டீஸ்பூன்,
மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்,
குங்குமப்பூ – 1/2 கப்.

செய்முறை
குக்கரில் தண்ணீர் மற்றும் பலாக்காய், மஞ்சள், உப்பு சேர்த்து ஒரு விசில் வரும் வரை வேக விடவும். பின் ஒரு கனமான பாத்திரத்தில் எண்ணெய், நெய் ஊற்றி அதில் பட்டை, கிராம்பு, சாகி ஜீரா, ஏலக்காய், பிரியாணி இலை, பிரியாணி மசாலா சேர்த்து பின் முந்திரி, திராட்சை சேர்த்து பின் பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும். பின் உப்பு, புதினா, கொத்தமல்லி, தயிர், மிளகாய்த்தூள், பிரியாணி மசாலா சேர்த்து நன்றாக வதக்கியவுடன் வேக வைத்த பலாக்காயை சேர்த்து நன்றாக வதக்கி பின் Fried onion சேர்த்து அதன்மேல் வேக வைத்த அரிசியை சேர்த்து மேலே Fried onion சேர்த்து, கொத்தமல்லி, புதினா சேர்த்து பின் குங்குமப்பூ சாறு சேர்த்து 15 நிமிடம் தம் போட வேண்டும். இப்போது சுவையான வித்தியாசமான ஆரோக்கியமான பலாக்காய் பிரியாணி தயார்.

இதனுடன் பலாக்காய் வறுவல் மற்றும் தயிர் சேர்த்து பரிமாறவும்.

நன்றி – தினகரன்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More