Thursday, April 18, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சமையல் பப்பாளிக்காய் சாதம்!

பப்பாளிக்காய் சாதம்!

1 minutes read

என்னென்ன தேவை?
உதிராக வடித்த சாதம் – 1 கப்,
தோல் நீக்கி பொடியாக நறுக்கிய பப்பாளிக்காய் – 1/2 கப்,
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்,
உப்பு,
அலங்கரிக்க கொத்தமல்லித்தழை – தேவைக்கு.

அரைக்க…
பச்சைமிளகாய் – 2,
தேங்காய்த்துருவல் – 1/4 கப்,
சீரகம் – 1 டீஸ்பூன்.

தாளிக்க…
கடுகு – 1/2 டீஸ்பூன்,
நெய் – 2 டீஸ்பூன்,
கறிவேப்பிலை – 5 இலைகள்.

எப்படிச் செய்வது?
பச்சைமிளகாய், தேங்காய்த் துருவல், சீரகம், உப்பு சேர்த்து மிக்சியில் கெட்டியான விழுதாக அரைக்கவும். கடாயில் நெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை தாளித்து, அரைத்த விழுது, பப்பாளிக்காய், மஞ்சள் தூள் சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும். பிறகு சாதம் சேர்த்து நன்கு கலந்து அடுப்பை நிறுத்தி, கொத்தமல்லித்தழையை தூவி சூடாக பரிமாறவும்.

நன்றி-தினகரன்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More