செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சமையல் செட்டிநாடு நண்டு கிரேவி…!

செட்டிநாடு நண்டு கிரேவி…!

1 minutes read

தேவையான பொருட்கள்
வறுத்து அரைக்க
எண்ணெய் 1 டேபிள் ஸ்பூன்
மிளகு 2 டீஸ்பூன்
சீரகம் 1 டீஸ்பூன்
சோம்பு 1 டீஸ்பூன்
மல்லிவிதை 1 டேபிள் ஸ்பூன்
வரமிளகாய் 6
வெங்காயம் 1 (பெரியது)
தக்காளி 2..
கிரேவி செய்ய தேவையான பொருட்கள்
எண்ணெய் 2 டேபிள்
ஸ்பூன்
நண்டு ½ கிலோ
சோம்பு 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை 1 கைப்பிடி
மல்லி இலை 1 கைப்பிடி
இஞ்சி பூண்டு விழுது 1 டேபிள்ஸ்பூன்
உப்பு தேவைக்கு.

செய்முறை
வறுத்து அரைக்க வேண்டிய பொருட்களை மிதமான தீயில் வறுத்து ஆறவைத்து அரைத்துக்கொள்ளவும். மற்றொரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு, கறிவேப்பிலை, இஞ்சி பூண்டு விழுது ஆகியவற்றை சேர்த்து வதக்கியபின் அரைத்த விழுதை சேர்த்து 5 நிமிடம் வதக்கி பிறகு நண்டு சேர்த்து தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து 10 முதல் 15 நிமிடம் கொதிக்க வைத்து பொடியாக நறுக்கிய மல்லித்தழை தூவி சூடாக பரிமாறவும்.

நன்றி -தினகரன்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More