தேவையானவை:
சீரக சம்பா அரிசி – 2 கப்,
இறால் -1/4 கிலோ,
பெருஞ்சீரகம் – ஒரு டீஸ்பூன்,
பட்டை – 3,
ஏலக்காய் – 5,
கிராம்பு – 4,
பிரியாணி இலை – ஒன்று,
அன்னாசிப்பூ – 2,
இஞ்சி – பூண்டு விழுது – 2 டீஸ்பூன்,
மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன்,
மஞ்சள்தூள் – 1/4 டீஸ்பூன்,
மல்லித்தூள் – 1/2 டீஸ்பூன்,
பெரிய வெங்காயம் – 2,
தக்காளி – 1,
நெய் – 5 டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு,
புதினா,
மல்லிதழை – கைப்பிடி அளவு,
எண்ணெய் – தேவையான அளவு,
எலுமிச்சை சாறு – 2 ஸ்பூன்,
தண்ணீர் – 3 1/2 கப்.
இறாலுடன் சேர்த்து ஊற வைக்க:
தயிர் – ஒரு டீஸ்பூன்,
எலுமிச்சைச் சாறு – ஒரு டீஸ்பூன்,
உப்பு – கால் டீஸ்பூன்,
மிளகாய்த்தூள் – கால் டீஸ்பூன்,
மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன்.
செய்முறை:
சீரக சம்பா அரிசியைக் கழுவி 15 நிமிடங்கள் ஊற வைக்கவும். இறால்களை நன்றாகச் சுத்தம் செய்து வைத்துக்கொள்ளவும். இறாலுடன் சேர்க்க வேண்டிய பொருள்களை ஒன்றாகச் சேர்த்து இறால்களின் மீது தடவி 15 நிமிடங்கள் ஊற வைக்கவும். இப்போது மண்பானையில் நெய், எண்ணெய் சேர்த்துச் சூடானதும் பெருஞ்சீரகம், பட்டை, ஏலக்காய், கிராம்பு, பிரியாணி இலை, அன்னாசிப்பூ ஆகியவற்றை ஒரே நேரத்தில் சேர்த்து, சில நொடிகளுக்குக் குறைந்த தீயில் வதக்கவும். பின்னர் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கி, தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். இஞ்சி – பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை நீங்கியதும் புதினா, கொத்தமல்லி சேர்த்து நன்றாகச் சுருளும் வரை வதக்கவும். இதனுடன் மிளகாய்த்தூள், மல்லித்தூள் சேர்க்கவும்.
நன்கு வதங்கியதும் ஊறவைத்த இறால் சேர்த்து 2 நிமிடம் சிறுதீயில் வதக்கவும். தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். தண்ணீர் நன்கு கொதித்ததும் சீரகசம்பா அரிசி சேர்த்து எலுமிச்சை சாறு சேர்க்கவும். தண்ணீர் சிறிது வற்றியதும் நன்கு இறுக்கமாக மூடி 10 – 12 நிமிடங்கள் மீதமான தீயில் வேகவிடவும். பின்னர் எடுத்துச் சூடாகப் பரிமாறவும். மண்பானையை உபயோகிக்கும் முன் நன்றாகக் கழுவி, துடைத்து வடித்த பின்னர் அரிசி தண்ணீர் அல்லது அரிசி வடித்த கஞ்சி அல்லது வெறும் தண்ணீரில் பானையை ஒருநாள் இரவு முழுவதும் ஊற வைக்கவும். அடுத்த நாள் தண்ணீரைக் கொட்டிவிட்டு நன்றாகக் கழுவவும். இதன் மீது தேங்காய் எண்ணெய் பூசி அடுப்பில் வைத்து மிதமான தீயில் மூன்று நிமிடங்கள் வெறும் பானையை வைத்து எடுத்து ஆற விடவும். பின்னர் தண்ணீரில் அல்லது அரிசி வடித்த தண்ணீரில் ஊற வைக்கவும். அடுத்த நாளும் இதுபோல் எண்ணெய் தடவி மேற்கூறியது போலவே தொடர்ந்து இரண்டு மூன்று நாள்கள் செய்தால் பானை வலுப்படும். மூன்றாம் நாள் பானையை நன்றாகக் கழுவிவிட்டுச் சமைக்க உபயோகிக்கவும்.
நன்றி-தினகரன்