Saturday, April 27, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home ஆசிரியர் தெரிவு சர்வதேச சதுரங்கப் போட்டிகளில் கலந்துகொள்ளும் யாழைச் சேர்ந்த சாதனைச் சிறுவன்

சர்வதேச சதுரங்கப் போட்டிகளில் கலந்துகொள்ளும் யாழைச் சேர்ந்த சாதனைச் சிறுவன்

1 minutes read

யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த கொக்குவில் இந்த ஆரம்ப பாடசாலையில் கல்வி பயிலும் வேணுகானன் நயனகேஷன் (FIDE ID: 29980305, RATING: Standard – 1116, Rapid – 1090, Blitz 1010) அண்மையில் நடைபெற்ற Sri Lanka National Youth Chess Championship 2024 – Super League போட்டியில் எட்டு வயதிற்குட்பட்ட திறந்த பிரிவில் (Under 08 Open) தேசிய சம்பியன் (National Champion) பட்டத்தை வென்று கீழ்த்தரப்பட்டுள்ள போட்டிகளில் வெளிநாடுகளிற்கு சென்று விளையாடுவதற்கான வாய்ப்பைப் பெற்றுள்ளார்.

மலேசியாவில் இம்மாதம் 20ம் திகதி முதல் 29ம் திகதி வரை நடைபெற உள்ள Commonwealth Chess Championship 2023–24 போட்டிகளில் கலந்துகொள்ளும் வேணுகானன் நயனகேஷனுடன் அவரது பயிற்றுனர் ஜூட் டொரிசனும் மலேசியாவிற்குப் பயணமாகியுள்ளார். இதற்கான அனுசரணையை இலண்டனைத் தளமாகக்கொண்டு இயங்கும் உலகத்தமிழ் சதுரங்கப் பேரவை ( World Tamil Chess Federation) மற்றும் First Choice Badminton Club ஆகியோர் வழங்கி வருகின்றனர்.
அவரது வெற்றிகளுக்காக உலகமெங்குமிருந்து வாழ்த்துகள் குவிந்தவண்ணம் உள்ளது.

வேணுகானன் நயனகேஷனுடன் அவரது பயிற்றுனர் ஜூட் டொரிசன்

01. Commonwealth Chess Championship 2023–24 (Malaysia, Feb 20-29)
02. World Cadet Youth Chess Championship 2024 (Albania, Apr 25-29)
03. World Youth Chess Championship 2024 (Brazil, Oct 22 – Nov 02)
04. Asian Youth Chess Championship 2024 (Kazakhstan)
05. West Asian Youth Chess Championship 2024 (Sri Lanka, Jun 01-09)

நயனகேஷனின் கடந்தகால சாதனைகள்
01. Asian Schools Chess Championship 2022 (Under 07 Open, Sri Lanka) – Participated
02. Sri Lanka School Individual Chess Championship 2023 (Under 07 Open) – National Champion
03. Asian School Chess Championship 2023 (Under 07 Open, Uzbeskisthan) – 6th Place
04. Number 1 FIDE Rated Chess Player in Sri Lanka – Under 08 Category

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More