புகைப்படத் தொகுப்பு

Home ஆசிரியர் தெரிவு சுவடுகள் 50 | “யாரொடு நோகேன்…” | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 50 | “யாரொடு நோகேன்…” | டாக்டர் ரி. கோபிசங்கர்

12 minutes read

“போர், கல்வி, பண்பாடு வாழ்வியல் என்று தமிழர்களின் எண்ண ஓட்டங்களை நகைச்சுவை இயல்போடு பதிவு செய்துவரும் தொடராக சுவடுகள் வாசகர் மத்தியில் பெருவரவேற்பை பெற்று வருகின்றது. மருத்துவ நிபுணர் டாக்டர் ரி. கோபிசங்கர் தனது பணிச் சுமையின் மத்தியிலும் கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் எழுதி வரும் சுவடுகள் மூன்றாவது ஆண்டை நிறைவு செய்து நான்காவது ஆண்டில் காலடி பதிக்கிறது. சுவடுகளின் 50ஆவது பதிவை பெரு மகிழ்வோடு வணக்கம் இலண்டன் பிரசுரிக்கிறது. வைத்திய நிபுணர் டாக்டர் ரி. கோபிசங்கருக்கு வாசகர்கள் சார்பில் வாழத்துக்களும் பாராட்டுக்களும்…” -ஆசிரியர்

2015

சனி இரவு 10:30 இருக்கும் சூப்பர் சிங்கர் சீசன் பாத்துக்கொண்டு இருந்தன் . விளையாடிக் கொண்டிருந்த phoneஐக் கொண்டந்து “அப்பா உங்களுக்கு call “எண்டு தந்தாள் மகள்.

சேர் “இருபத்தி ஐஞ்சு வயசு , கிளிநொச்சீல இருந்து அனுப்பினவை “எண்டு சொல்லத்தொடங்க , சரி நான் வாறன் எண்டு phone ஐ வைச்சிட்டு சாரம் கழற்றி உடுப்பு மாத்தி வெளிக்கிட்டன். அங்க போய் உடன தொடங்க வேணும் எண்டு யோச்சபடி

இண்டையான் on call surgeon னிடசொல்லி அவையின்டை operationஐ நிப்பாட்டி எங்கடை case ஐச் செய்யக் கேக்கோணும், ஆர் anaesthetist எண்டு கேக்க வேணும் ICU bed தேவைப்படும் ,bed இல்லாட்டித்தான் பிரச்சினை எண்டு பல யோசனைகளோடு நான் வெளிக்கிட்டன். Theatre க்கு நான் போக எல்லாம் ரெடியாகி அடிபட்டவனை உள்ள எடுத்து மயக்கம் குடுக்கத் தொடங்கீட்டினம் . வெளீல நிண்ட attendant ரெஜிபோம் பெட்டியோட இரத்தம் எடுக்க ஓடிப்போக நானும் உடுப்பு மாத்தி உள்ள போனன் . X-ray எடுக்க கேட்டனான் தான் duty இல்லை ஆனாலும் வாறன் எண்ட தயாபரன் உடுப்பு மாத்தி உள்ள நிண்டான். nurse மதி எல்லாத்தையும் ஒழுங்கு படித்தீட்டு assist பண்ண ready யா நிண்டான்.

இரண்டு மணித்தியாலத்திக்கு பிறகு வெளீல வந்து யாரும் சொந்த காரர் இருக்கினமோ எண்டு பாக்க ஒருத்தரும் இல்லை. எல்லாம் முடிஞ்சுது எண்டு நானும் வீட்டை வெளிக்கிட்டன்.

அடுத்த நாள் காலமை போக , கைக்குழந்தையோட இன்னொரு பெரிய குழந்தை ICU வாசலில நிண்டது. “Sir இவை தான் இரவு வந்த …” எண்டு Nurse சொல்ல , கையில இருக்கிற அழுற சின்னனை, எப்படி ஒராட்டோணும் எண்டும் தெரியாமல் குறுக்கும் மறுக்குமா ஆட்டி ஆட்டி , “அவருக்கு எப்பிடி “, எண்டு கேக்கத்தான் உறவு முறைகள் விளங்கிச்சு.

முள்ளிவாய்க்கால் நேரம் கட்டினாக்களை பிடிக்கமாட்டாங்களாம் எண்டு அவசரமாக நடந்த தாலி போடும் விழாவுடன் ஓடத் தொடங்கி ,பெயர்ச்சிகளால் இடம் மாறி ,இலகு நிவாரணங்களுக்காக இப்ப தஞ்சம் புகுந்தது திருவையாறு எண்ட கதையை கேட்டிட்டு, அவருக்கு நடத்தை எப்படி சொல்லுறது எதை சொல்லாமல் விடுறது , சொன்னால் விளங்குமா எண்டு நானும் குளம்பி, வழமையான டாகுத்தர்மாரின்டை பாசையில, “அம்மா முள்ளந்தண்டு பாதிச்சிட்டுது operation செய்தனாங்கள் , முன்ணாண் , நரம்புகள் எல்லாம் பாதிச்சிட்டுது , எழும்பி நடக்கிறது கஸ்டம் , எண்டு கொஞ்சம் விளங்காத மாதிர சொன்னன். எல்லாம் விளங்கின மாதிரிக் கேட்டுட்டுப் பாவம், “ ஒரு பிரச்சினையும் இல்லைத்தானே எண்டு மீண்டும் அப்பாவியாய் கேக்க” , நான் இதுக்கு என்னத்தை சொல்லிறதெண்டு யோசிக்க ,security வந்து “அம்மா நேரமாகீட்டுது இப்ப போட்டு பிறகு வாங்கோ”எண்டு என்னை காப்பாத்தி விட்டான் .

ரெண்டு நாளால Ward க்கு மாத்தின அவனுக்கு பாக்க ஆக்கள் இல்லாத படியால ஆம்பிளை வாட் எண்டாலும் பரவாயில்லை எண்டு கொஞ்ச நேரம் பகல்ல மனிசியியையும் பிள்ளையோட அவனுக்குப் பக்கத்தில நிக்கவிட்டம். முதல் மூண்டு நாளும் ஒவ்வொரு நாளும் வந்த மனிசி பிறகு விட்டு விட்டுத் தான் வந்திச்சுது . ஒரு கிழமை கழிய திருப்பியும் நான் அவனின் நிலமையை விளங்கப்படுத்தினன். இப்ப நிலமை விளங்க அவரால இனி நடக்க முடியாததை உணர்ந்து “அது நடக்காப்பிணம் நான் நடைபிணம்” எண்டதை அறிந்து நடந்தாள் அவள்.

இளம் பெடியன் இப்படி நடந்திட்டு ,பாவம் எண்டு physiotherapist எல்லாம் கடுமையா உழைக்க , எல்லாருக்கும் குடுக்கும் அதே காருண்யத்தை ward nurses இவனுக்கு கொஞ்சம் கூடக் குடுக்க, அவனுக்குள் ஒரு ஒளிவட்டம் தெரியத்தொடங்கிச்சு.

அவள் வந்து போறது இன்னும் கொஞ்சம் குறைய , “ என்ன மூண்டு நாளா அவவைக்காணேல்லை”எண்டு வாட்டில கேக்கத்தான் வீட்டு நிலமை விளங்கியது . வீட்டில ஒரு சொந்தங்களும் இல்லை எண்டும், இருக்க இடம் குடுத்தது தூரத்து சொந்தமாம் எண்டும். 2009 க்கு பிறகு ஊரப்பக்கம் முளைத்த கம்பனிகள் ஒண்டில Lease க்கு எடுத்த Auto , ஓடித்திரியேக்க சாப்பிட மட்டும் காணுமான காசு கிடைக்க முதல் முதலா வாழக்கையில் பிடிப்பும் நம்பிக்கையும் ஏற்படத்தொடங்கினது எண்டு சொன்னான் . எப்பவாவது ஒரு முன்னேற்றம் வரும் எண்ட நம்பிக்கையில் மட்டுமே வாழுற வாழ்க்கையில் மீள்குடியமர்வு, நிவாரணம் , சமுர்த்தி, வீட்டுத்திட்டங்கள் எண்ட நம்பிக்கைகள் ஏனோ அந்நிய நாடுகளின் அனுசரணை போல இருந்தும் இல்லாமல் இருந்தது.

ஒரு மாசமா இருந்தவனைப் பாக்க மனிசி வாறதும் குறையத் தொடங்கிச்சுது. கடைசியா வரேக்க கொஞ்சச் சாமாங்களும் Nestomalt ரின் ஒண்டும் கொண்டு மனிசி வந்தது, அதுக்குப் பிறகு காணேல்லை. சரி எண்டு எல்லாம் முடிய அவனை ambulance மூலம் கிளிநொச்சிக்கு திருப்பி அனுப்பி வைச்சம் .

ஒரு நாள் நான் கிளினிக் முடிச்சு வெளீல வரேக்க பிள்ளையோட அவன்டை மனசி நிண்டுது. ஏனெண்டு கேக்க , இல்லை உங்களை பாக்கத்தான் எண்டு ஒரு form ஒட வந்தவளை கூட்டிக்கொண்டு போய் முள்ளந்தண்டு வடம் பாதிப்பு எண்டு உறுதி செய்து குடுத்து விட ஒரு ஓட்டோவில் ஏறிப் போறதைப் பாக்க வந்த கவலையை call ஒண்டு போக்கியது.

மூண்டு மாதத்தால வழமை போல கிளினிக்குக்கு ஆஸ்பத்திரிக்கு அந்தப்பெடியன் நடந்து walking stick ஓட நடந்து வந்தான் , எனக்கே என்னை பெருமைப்பட வைச்ச சந்தர்ப்பம் அவன் walking stick ஓட நடந்தது.

“சேர் வாகனத்தை பொலிசில இருந்து எடுக்க license கேக்கிறாங்கள் , license தரமாட்டாங்களாம் எண்டு சொல்லுறாங்கள் , தாற எண்டா உங்கடை கடிதம் வேணுமாம்” எண்டபடி உள்ள வந்தான். Recommended for modified three wheelers எண்டு குடுத்துப்போட்டூ , அவன்டை மனிசியேயும் பிள்ளையேயும் தேடினா காணேல்லை. அடக்கமுடியாத தமிழனின் விடுப்பு குணத்துடன் , “ எங்க மனிசி பிள்ளையைக் காணேல்லை” எண்டு கேக்க ஒரு சங்கடத்துடன் அவன் பதட்டப்பட , அப்படியே அடுத்த patient உள்ள வர , உள் மனதால் அவனையும் வெளிக்கண்ணால் வந்த நோயாளிகளையும் பார்க்கத் தொடங்கினன்.

கிளினிக் முடிஞ்சு வெளீல வர அவன் car அடீல நிண்டான். எனக்காக தான் எண்டு அறிஞ்சு என்னைத் தனிமைப்படுத்தினேன். இல்லைசேர் இப்ப அவ எண்டவன் தன்டை நிலைமையைச் சொன்னான். அண்டைக்கு இரவு டிப்பரோட அடிபட்டு சாக இருந்தவன் , இப்ப உயிர் தப்பினாலும் நானும் படுத்த படுக்கை , செலவளிக்க சொத்துமில்லை, சேர்த்து வைச்ச சொந்தங்கள் உறங்கு நிலை விதைகளாய் முள்ளிவாய்க்காலில போட்டுது. கட்டினதால விழுதாய் வந்த முளை கையில, பஸ்ஸுக்கு நிக்கேக்க பாவப்பட்ட ஒரு ஓட்டோக்காரன் உதவிக்கரம் நீட்ட அவள் பற்றிக்கொண்டால் நீரில் மூழ்கும் போது கிடைத்த துரும்பு மாதிரி எண்டதை அறிஞ்சன்.

ஓடம் கவிண்டு நீரில் மூழ்க , உள்நீச்சலோ எதிர் நீச்சலோ தெரியாமல் தண்ணியில் நிக்க கூட திராணியற்று தத்தளித்து, கைச்சுமையுடன் நிண்டவளுக்கு அந்தக்கை ஓரு அபயக்கையாக அதை இறுக்கவே பற்றிக்கொண்டாள் எண்டதையும் சொன்னான்.

ஓட்டோவில் வந்து கடைசி நாட்களில் ஆஸபத்திரியில் அவனையும் பாத்து தேவையானதை எல்லாம் எனக்கு வாங்கி குடுக்கக காசும், கையில இருந்த பிள்ளைக்கும் பாலும் சாப்பாடும் கிடைக்க , எல்லோர் பசியும் தீரத்தொடங்கினது எண்டது பிறகு தான் வடிவாய் விளங்கிச்சிது. அதுவே சில மாசத்தில நிரந்தரமானது எண்டதை குற்றமாச் சொல்லாமல் யதார்த்தம் அறிந்து சொன்னான்.

“போன கிழமையும் கண்டனான் அவனோட ஓட்டோவில போனவள் பிள்ளையையும் கொண்டு, பிள்ளையும் சிரிச்சுக்கொண்டு இருந்தது . இரண்டு பேரும் ஆளை ஆள் கண்டனாங்கள் , கண்டிட்டு ….”அவன் சொல்லி முடிக்கேல்லை.

“இப்ப நான்கொஞ்சம் பிடிச்சுப் பிடிச்சு நடப்பன், கக்கூசுக்கு தான் குந்தி எழும்ப முடியாது , கதிரையில ஓட்டையை போட்டு சமாளிக்கிறன். சேர் அந்த மூத்திரக்குழாய் மாத்திறது தான் பிரச்சசினை , இதை அப்பிடியே எடுத்தால் என்ன” எண்டு கேட்டவனின் விரக்தியை உணர்ந்து , அதைப்போக்க , தம்பி நடக்கத்தொடங்கின படியால் இதுகும் கொஞ்சம் முன்னேற்றம் வரும் எண்டு ஒரு தெய்வ நம்பிக்கையோடு சொன்னன். “சரி சேர் இப்ப திருப்பியும் ஆட்டோ ஓடுற படியால் காசு வருது , தனி ஆள் தானே செலவில்லை” எண்ட படி கைத் தடியை மெல்லவும் நம்பிக்கையை உறுதியாயும் ஊண்டி நடக்கத் தொடங்கினான்.

அம்புலிமாமாவில வாற வேதாளம் கதைக் கேள்வி எனக்கும் வந்திச்சுது ? “இதில் யார் செய்தது குற்றம்“ எண்டு. விடை தெரியாமல் நான் யோசிக்க , எங்கயோ தூர ஒரு கோயிலில போட்ட loud speaker , “ யாரொடு நோகேன் யார்க்கெடுத்துரைப்பேன் ஆண்ட நீ அருளிலையானால் “ எண்டு பாடத் தொடங்கிச்சுது

Dr. T. கோபிசங்கர்
யாழ்ப்பாணம்

சுவடுகள் இதுவரை வெளியான தொடர்கள்

சுவடுகள் 01 | இது ஒரு சுளகு மான்மியம் | டாக்கடர் ரி கோபிசங்கர்

சுவடுகள் 02 | புட்டு | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 03 | தடை தாண்டிய பயணங்கள் | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 04 | மணியண்ணை ரைட் | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 05 | ‘கள்ள மாங்காயின் சுவை தெரியுமா?’ | மா(ன்)மியம் | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 06 | ஒரு குமரை கரை சேக்கிறது | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 07 | போதி மரம் | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 08 | பூதம் கிளம்பிச்சு | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 09 | ஆயிரம் பொய் சொல்லி | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 10 | கலியாணத்தண்டு மழை | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 11 | கனவிலேம் நித்திரை | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 12 | துடக்கில்லாத கற்கண்டு | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 13 | கம்மாரிசு | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 14 | ஹர்த்தால் | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 15 | அன்னபூரணி | டாக்கடர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 16 | இதில் போனால் சங்கடம் (இ.போ.ச) | டாக்கடர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 17 | உயர்திணை | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 18 | “அரிசிப் பொதியோடும் வந்தீரோ” | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 19 | பிளவு | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 20 | நீண்ட வரிசையில்… | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 21 | கன்னிக்கால் | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 22 | பொறுப்பு துறப்பு | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 23 | உது(தை)க்குத்தானே ஆசைப்பட்டாய்… | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 24 | இந்த அடி நாளைக்கு… | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 25 | பக்கத்து இலைக்கு பாயாசம்…. | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 26 | காதல் திருவிழா | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 27 | தலை கால் தெரியாம… | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 28 | தாண்டாக்கடல் | டாக்டர் ரி. கோபிசங்கர் …

சுவடுகள் 29 | அழையா விருந்தாளி | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 30 | உண்ட களை தொண்டருக்குமாம்… | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 31 | சுயம் இழந்த சரிதம்… | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 39 | இலக்கை நோக்கி | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 40 | ‘பாலுமகேந்திரா’ | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 41 | ‘காய்ச்சல்’ | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 42 | ஏற்றுமதி | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 43 | பாஸ் எடுத்தும் fail | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 44 | வெத்து இலை | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 45 | பிரி(யா)விடை | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 46 | “கப்பு முக்கியம்” | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 47 | காதல் கடை | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 48 | சாண் ஏற பப்பா சறுக்கும் | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 49 | லௌ(வ்)கீகம் | டாக்டர் ரி. கோபிசங்கர்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More