September 21, 2023 1:37 pm

பாரம்பரிய பட்டு | தகுந்த பராமரிப்பு அவசியம் பாரம்பரிய பட்டு | தகுந்த பராமரிப்பு அவசியம்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

பட்டுசேலை பொதுவாக பெண்கள் அனைவரும் விரும்பும் ஒன்று. விலை அதிகம் கொடுத்து வாங்ககூடிய பட்டுசேலையை கவனமாக பராமரிக்க வேண்டும். நிழலில் காற்றாட 2&3 மணி நேரம் உலர விட்டு பின்னர் கையினால் அழுத்தித் தேய்த்து மடித்து வைக்கவும்.

எக்காரணம் கொண்டும் பட்டுச்சேலையை சூரிய ஒளியில் போடக்கூடாது, சோப்போ அல்லது சோப் பவுடரோ உபயோகித்து துவைக்கக் கூடாது. வெறும் தண்ணீரில் விட்டு அலசினாலே போதுமானது.

ஏதாவது கறை பட்டுவிட்டால் உடனே தண்ணீர் விட்டு அலச வேண்டும். எண்ணெய் கறையாக இருந்தால் அந்த இடத்தில் மட்டும் விபூதியை தடவி 5&10 நிமிடங்கள் வைத்திருந்து பின்பு தண்ணீர் விட்டு அலச வேண்டும்.

பட்டுப்புடவைகளை வருடக்கணக்கில் தண்ணீரில் நனைக்காமல் வைக்கக்கூடாது. 3 மாதத்திற்கு ஒரு முறையாவது தண்ணீரில் அலசி நிழலில் உலர விட்டு அயர்ன் செய்து வைக்க வேண்டும்.அயர்ன் செய்யும் போது ஜரிகையைத் திருப்பி அதன் மேல் மெல்லிய துணி விரித்து அயர்ன் செய்ய வேண்டும். நேரடியாக அயர்ன் செய்ய கூடாது.

பட்டுச் சேலையை கடையிலிருந்து வாங்கி வந்தபடி அட்டை பையில் வைக்காமல் துணி பையில் வைக்கலாம்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்