பெண்கள் கைப்பையினுள் உள்ள பொருட்களில் கவனிக்க வேண்டியவைபெண்கள் கைப்பையினுள் உள்ள பொருட்களில் கவனிக்க வேண்டியவை

தேவையான சில பொருட்களை பெண்கள் வைத்துக் கொள்வதற்காகத் தான் ஹேண்ட் பேக். அதில் மேக்கப் ஐட்டங்கள், பெண்கள் சமாச்சாரங்கள் முதல் மணிபர்ஸ், சாவிக் கொத்துக்கள் வரை வைத்துக் கொள்வதை நாம் பார்த்திருக்கிறோம்.

• கைப்பையில் அவசியமான சில பொருட்களை மட்டும் வைத்துக் கொண்டால் தான் அழகு. ஆனால் இப்போதெல்லாம் தேவையில்லாத கசடுகளும் அடைக்கப்பட்டுக் கொண்டு, பையை வீங்க வைத்துக் கொண்டுள்ளன. அதுபோன்ற சில தேவையில்லாத பொருட்கள் உங்கள் உடல் நலத்துக்கும் கெடுதல் தருவதாகும்.

தேவையில்லாமல் கைப்பையில் அடைபட்டுக் கிடக்கும் அத்தகைய பொருட்களை பார்க்கலாம்… ஒருமுறை மட்டுமே உபயோகித்து எறிந்து விடக் கூடிய பாட்டில்களில் எல்லாம் தண்ணீரை நிரப்பிக் கொண்டு அதை கைப்பையில் வைத்துக் கொள்வது நல்லதல்ல.

இதுப்போன்ற பாட்டில்களில் நாப்தலீன் என்ற வேதிப் பொருள் இருப்பதால் அது தண்ணீருடன் கலந்து விஷத் தண்ணீராக மாறி விடும். அதற்கு பதிலாக ஆரோக்கியமான அலுமினியம் அல்லது ஸ்டெயின்லெஸ் ஸ்டீலினால் செய்யப்பட்ட பாட்டில்களில் தண்ணீரை அடைத்து வைத்துக் கொள்வது நல்லது.

• பல பெண்கள் கைத்துண்டுகளைக் கொண்டு மூக்கை நன்றாகச் சிந்தி விட்டு, அவற்றை மறுபடியும் கைப்பைக்குள்ளேயே வைத்துக் கொள்கிறார்கள். அது கைப்பைக்குள்ளேயே இருந்து கொண்டு வைரஸ்களைப் பரப்பும். எனவே கைத்துண்டுகளைப் பயன்படுத்தி விட்டு அவற்றை மீண்டும் கைப்பைக்குள் வைக்கும் பழக்கத்தை விடுங்கள்.

ஆசிரியர்