Thursday, October 28, 2021

இதையும் படிங்க

குடும்ப ஆட்சி காரணமாக இலங்கை குட்டிச்சுவராகி பொருளாதாரத்தில் தாழ்ந்து போயுள்ளது!

ராஜபக்ஷ அரசின் குடும்ப ஆட்சி காரணமாக இலங்கை குட்டிச்சுவராகி பொருளாதாரத்தில் தாழ்ந்து போயுள்ளது இதுவே இன்று விவசாயிகளுக்கும் நடந்துள்ளது என்று நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

இந்தியா மீது பொருளாதார தடைகளை விதிக்கக் கூடாது எனக் கோரிக்கை!

ரஷ்யாவிடம் இருந்து ஏவுகணைகளை கொள்வனவு செய்வதால் இந்தியா மீது பொருளாதார தடைகளை விதிக்கக் கூடாது என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு இரு முக்கிய அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடிதம்...

சுண்டு விரல் ரேகையை வைத்து எத்தனை குழந்தை பிறக்கும் என தெரிந்து கொள்ளலாமா?

குழந்தை பாக்கியம் பற்றி ஒருவரது கைரேகையைக் கொண்டும் கணிக்க முடியும். ஒருவரது கையில் சுண்டு விரலுக்கு கீழே திருமண ரேகையின் மீது இருக்கும்...

உலக சுகாதார அமைப்பின் தொழில்நுட்ப ஆலோசனைக் குழு உறுப்பினராக நீலிகா மாளவிகே நியமனம்!

கொரோனா தொடர்பான உலக சுகாதார அமைப்பின் (WHO) தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் உறுப்பினராக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவத் துறையின் தலைவர் பேராசிரியர் நீலிகா மாளவிகே...

போதைப் பொருள் வழக்கு | ஆர்யன் கானுக்கு ஜாமீன் வழங்கியது மும்பை ஐகோர்ட்

ஆர்யன் கானின் ஜாமீன் மனுக்கள் கீழ் நீதிமன்றத்தில் 2 முறை தள்ளுபடி செய்யப்பட்டதையடுத்து மும்பை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

இராணுவத்திடமிருந்த 11 ஏக்கர் காணி மக்களின் பாவனைக்காக கையளிப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பகுதியில்  இராணுவ வசம் இருந்த 11 ஏக்கர் காணிகள் அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளன. முல்லைத்தீவு...

ஆசிரியர்

முதலிரவு ஆய்வுகளும்.. ருசிகரமான உண்மைகளும்..

பல பெண்கள் பழைய கசப்பான விஷயங்களை மனதுக்குள் போட்டு குழப்பி முதலிரவை கண்டு பயப்படுகிறார்கள். அந்த பயமே, அவர்களது முதல் இரவை முழுமையற்றதாக ஆக்கிவிடுகிறது.

திருமணம் முடிந்து முதலிரவுக்குள் அடியெடுத்துவைக்கும் தம்பதிகளை பற்றிய ருசிகரமான ஆய்வுகள் அவ்வப்போது வெளியாகிக் கொண்டிருக்கின்றன. ஆனால் எல்லா ஆய்வு களுமே, ‘அது எந்த தம்பதிக்கும் முழுமையான சுகத்தை தரும் இரவாக அமைந்ததில்லை’ என்றே குறிப்பிடுகின்றன. அடுத் தடுத்த நாட்களே அவர்களது ஆசைகளை தீர்த்துவைக்கின்றன என்று குறிப்பிடுகின்றன. சில புதுமணத் தம்பதிகளின் முதலிரவு அனுபவங்களை கேட்போம்!

அனீஷ் தனக்கு பணம், நகை எதுவும் தேவையில்லை. பெண் அழகாக இருக்கவேண்டும் என்ற நிபந்தனையை மட்டும் விதித்தான். அவன் எதிர்பார்த்தது போன்ற பெண்ணை பெற்றோர் தேடிப்பிடித்து திருமணம் செய்துவைத்தார்கள். அந்த பெண் மிகவும் நல்லவள். ஆனால் முதலிரவில், கணவருடன் தனிமையில் நெருங்க தயங்கினாள். அதனால் அவன், மனைவி தன்னிடம் பிரியமாக இல்லை. அவளை தன்னிடம் ஒப்படைக்க தயங்குகிறாள் என்று நினைத்துவிட்டான். அதனால் அவர்களது முதலிரவு தள்ளிப்போனது. புதுப்புது காரணங்களை கண்டுபிடித்து, ஒவ்வொரு நாளையும் தள்ளிக்கொண்டே இருந்தாள். அவளை ஏதோ ஒரு விஷயம் ஆட்டிப்படைப்பது, அவனுக்கு புரிந்தது.

பலமுறை அதுபற்றி அவன் பேச முயற்சித்தும், அவளிடம் இருந்து தெளிவான பதில் கிடைக்கவில்லை. புதுப்பெண்ணுக்குரிய பொலிவு அவள் முகத்தில் மலராமல் போனது பெற்றோரை கவலைக்குள்ளாக்கியது. அவளது பயத்துக்கும், தயக்கத்துக்கும் உண்மையான காரணம் எது என்பதை வெகுகாலம் கழித்தே அவர்களால் கண்டறிய முடிந்தது.

திருமணமான அவளுடைய தோழிகளில் சிலர், தங்களுக்கு அன்று வலி அனுபவம் ஏற்பட்டதாக அவளிடம் பகிர்ந்திருக்கிறார்கள். அதை கற்பனை செய்துபார்த்து, தனக்கும் அதுபோன்ற வலி ஏற்பட்டுவிடும் என்று அவள் பயந்துவிட்டதாலே, கணவரின் நெருக்கத்தை தவிர்த்திருக்கிறாள். முதலிரவு என்பது பெண்களுக்கு வலியும் வேதனையும் தரக்கூடியது என்ற சிந்தனை அவள் மனதில் ஆழமாக பதிந்துவிட்டது. அந்த பயத்தை போக்குவதற்குள் அவளுக்கு திருமணம் நடந்துவிட்டது.

வித்யாவின் கதை இன்னொரு மாதிரியானது. திருமணம் நிச்சயிக்கப்பட்டு விட்ட நிலையில் அவள் கதிகலங்கிப் போய் இருந்தாள். மணப்பெண்ணுக்குரிய மகிழ்ச்சி அவள் முகத்தில் தென்படவில்லை. பெற்றோர் பலமுறை கேட்டும் எந்த பதிலும் சொல்லவில்லை. அவளுடைய நெருங்கிய தோழி அவளை தனியே அழைத்து விசாரித்தாள். வித்யாவோ அம்மா, அப்பாவை விட்டு பிரிந்து போக கவலையாக இருக்கிறது என்றாள். தோழி அதை நம்பவில்லை. அவள் எதையோ மறைக்க முயற்சிப்பது புரிந்தது. எதுவாக இருந்தாலும் மறைக்காமல் சொல். நான் தீர்வு சொல்கிறேன் என்று ஆறுதலாக பேசினாள்.

அப்போது தயக்கத்தில் இருந்து விடுபட்ட வித்யா, ‘முதலிரவை நினைத்து பயப் படுகிறேன்’ என்றாள். அப்படி என்ன பயம் என்று தோழி கேட்டபோது கண்ணீர் விட்டு அழுதபடி, அறியாத வயதில் நடந்த சம்பவம் ஒன்றை குறிப்பிட்டாள். ‘என்னவென்றே தெரியாத வயதில் நிகழ்ந்து விட்ட தவறுக்கு தான் காரணம் இல்லை என்றாலும் அது அடிக்கடி மனதுக்குள் வந்து காயப் படுத்துகிறது. அதனால் முதலிரவை நினைத்து பயமாக இருக்கிறது. நான் எப்படி திருமணத்தை நினைத்து மகிழ்ச்சி அடைவது?’ என்று கேள்வி எழுப்பியவள், ‘எனக்கு உறுத்தலாகவும், பயமாகவும் இருக்கிறது. என்னை பற்றிய உண்மையை தெரிந்துகொண்டால் என் கணவர், என் குடும்பத்தை பற்றியும் கேவலமாக நினைத்து விடுவார்’ என்று கதறியழுதாள்.

அவளுக்கு ஆறுதல் சொன்ன தோழி, ‘நீ அவசரப்பட்டு முடிவெடுத்து வாழ்க்கையை கெடுத்துக்கொள்ளாதே. இந்த மாதிரியான பாலியல் பாதிப்புகள் பெரும்பாலான பெண்களுக்கு சிறுவயதில் ஏற்பட்டிருக்கிறது. எனக்குகூட நடந்திருக்கிறது. நான் அதை கெட்டகனவாக நினைத்து மறந்துவிட்டேன். நீயும் மறந்துவிடு. அதை திரு மணத்திற்கு பின்பு உன் கணவரிடம் சொன்னால் தேவையற்ற பிரச்சினைதான் ஏற்படும்’ என்று சரியான முறையில் விளக்கம் கொடுத்தாள்.

வித்யாவிற்கு நடந்தது என்னவென்றால், தனது பள்ளிப்பருவத்தின் இறுதிக்காலத்தில் அவள் தனது தோழனுடன் தகாத உறவில் ஈடுபட்டுவிட்டாள். அதன் பின்பு தன்னை திருத்தி, அந்த உறவுக்கு முற்றுப்புள்ளிவைத்துவிட்டாலும், தான் உறவு கொண்டது வருங்கால கணவருக்கு தெரிந்துவிடுமோ என்ற அச்சம்தான் அவளை வாட்டிவதைத்ததற்கான காரணம்!

இதுபோல பல பெண்கள் பழைய கசப்பான விஷயங்களை மனதுக்குள் போட்டு குழப்பி முதலிரவை கண்டு பயப்படுகிறார்கள். அந்த பயமே, அவர்களது முதல் இரவை முழுமையற்றதாக ஆக்கிவிடுகிறது.

மகளை திருமணத்திற்கு தயார் செய்யும் பெற்றோர், முதலில் அவளது மனநிலை எப்படி இருக்கிறது என்பதை கணிக்கவேண்டும். அதில் அலட்சியம்காட்டக் கூடாது. தேவைப்பட்டால் அதற்குரிய கவுன்சலிங்கை பெறவேண்டும். அவளது மனதில் இருக்கும் குழப்பங்களை அகற்றிவிட்டு, அதன் பின்பு மணவாழ்க்கைக்குள் அடியெடுத்துவைத்தால்தான், முதல் இரவு மட்டுமின்றி எல்லா இரவுகளும் இனிக்கும்.

திருமணத்துக்கு முன்பு ஏதோ ஒரு அசம்பாவிதம் நடந்து விட்டாலும் அதை மனதில் இருந்து தூக்கிப் போட்டு விட்டு இனி வரும் வாழ்க்கையை நேர்மையாக வாழும் மனப் பக்குவத்தை பெண்கள் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். தவறுகள் யாரும் தெரிந்து செய்வதில்லை. அதை தாண்டி வர பழகிக்கொள்ள வேண்டும். தான் ஒரு நேர்மையான நல்ல மனைவி என்று பெயரெடுக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் முதலிரவில் வேண்டாத விஷயங்களை கணவரிடம் சொல்வது தவிர்க்கப்பட வேண்டும். ஒருவேளை அது கடைசிகாலம் வரை தீர்க்க முடியாத சிக்கலை உருவாக்கி விடும். கடந்த கால கசப்பான அனுபவங்கள், நிகழ்காலத்தையும், வருங்காலத்தையும் வாட்டி வதைத்து கசப்பாக்கி விட அனுமதித்துவிடக்கூடாது.

ஆய்வுகள் சொல்வதுபோல் முதலிரவு இனிக்காவிட்டாலும், அடுத்தடுத்து வரும் அனைத்து இரவுகளையும் இன்பமயமானதாக ஆக்க கணவனும்- மனைவியும் மனம்விட்டுப்பேசி, ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்துகொள்ளவேண்டும். நம்பிக்கையும் கொள்ளவேண்டும்.

இதையும் படிங்க

இந்தியாவில் அக்னி-5 ஏவுகணை பரிசோதனை வெற்றியடைந்துள்ளதாக அறிவிப்பு!

கண்டம் விட்டு கண்டம் தாண்டி இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் அக்னி -5 ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஏவுகணை பரிசோதனை ஒடிசா...

ஒலுவில் மூலம் அம்பாறைக்கு வளமான எதிர்காலம் உருவாக்கப்படும்!

ஒலுவில் துறைமுகத்தினை மீன்பிடிச் செயற்பாடுகளுக்காக விரைவில் திறக்கப்படும் என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்படுகின்ற அனைத்து சட்டவிரோத தொழில் முறைகளுக்கும் முடிவு கட்டப்படும் எனவும் தெரிவித்தார்.

இலங்கையின் பொருளாதார மறுமலர்ச்சிக்கு சீனாவிடமிருந்து கிடைக்கும் ஒத்துழைப்பிற்கு பிரதமர் பாராட்டு!

இந்நாட்டின் பொருளாதார மறுமலர்ச்சிக்கு சீனாவிடமிருந்து கிடைக்கும் தொடர்ச்சியான ஒத்துழைப்பு தொடர்பில் இலங்கைக்கான சீன தூதுவர் சீ.ஷென்ஹொன் அவர்களின் முன்னிலையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தனது பாராட்டினை தெரிவித்தார்.

கர்நாடகாவில் கொரோனா தொற்றின் புதிய திரிபு கண்டு பிடிப்பு!

கர்நாடகாவில் கொரோனா தொற்றின் புதிய வைரஸான AY 4.2 பரவி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. குறித்த வைரஸ் தொற்றினால் இதுவரை ஏழு பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

தமிழர்களையும் முஸ்லிம்களையும் இந்த நாட்டில் இருந்து விரட்டுவதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றதா?

மிக மோசமான இனவாதியைக் கொண்டுவந்து ஒரே நாடு ஒரே சட்டம் என்று சொல்லச் சொன்னால் தமிழர்களையும் முஸ்லிம்களையும் இந்த நாட்டில் இருந்து விரட்டுவதும், அவர்களுக்கு எதுவுமே இல்லாமல் செய்வதுதான் இவர்களது...

ஜம்மு – காஷ்மீர் முழுவதும் இந்தியாவின் கட்டுப்பாட்டில் வரும்!

ஜம்மு – காஷ்மீர் முழுவதும் இந்தியாவின் கட்டுப்பாட்டில் வரும் என விமானப் படையின் மேற்கு கமாண்டப் பிரிவின் தலைவர் ஏர் மார்ஷல் அமித் தேவ் தெரிவித்துள்ளார்.

தொடர்புச் செய்திகள்

இந்தியாவில் அக்னி-5 ஏவுகணை பரிசோதனை வெற்றியடைந்துள்ளதாக அறிவிப்பு!

கண்டம் விட்டு கண்டம் தாண்டி இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் அக்னி -5 ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஏவுகணை பரிசோதனை ஒடிசா...

ஒலுவில் மூலம் அம்பாறைக்கு வளமான எதிர்காலம் உருவாக்கப்படும்!

ஒலுவில் துறைமுகத்தினை மீன்பிடிச் செயற்பாடுகளுக்காக விரைவில் திறக்கப்படும் என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்படுகின்ற அனைத்து சட்டவிரோத தொழில் முறைகளுக்கும் முடிவு கட்டப்படும் எனவும் தெரிவித்தார்.

இலங்கையின் பொருளாதார மறுமலர்ச்சிக்கு சீனாவிடமிருந்து கிடைக்கும் ஒத்துழைப்பிற்கு பிரதமர் பாராட்டு!

இந்நாட்டின் பொருளாதார மறுமலர்ச்சிக்கு சீனாவிடமிருந்து கிடைக்கும் தொடர்ச்சியான ஒத்துழைப்பு தொடர்பில் இலங்கைக்கான சீன தூதுவர் சீ.ஷென்ஹொன் அவர்களின் முன்னிலையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தனது பாராட்டினை தெரிவித்தார்.

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

3 வாரங்களுக்கு சீமெந்து தட்டுப்பாடு தொடரும் | லசந்த அழகியவண்ண

நாட்டில் தற்போது நிலவும் சீமெந்து தட்டுப்பாடு எதிர்வரும் 3 வாரங்களுக்கு தொடரும் எனத் தெரிவித்துள்ள இராஜாங்க அமைச்சர் லசந்த அழியவண்ண, 3 வாரங்களின்...

20 ஆண்டுகளுக்கு பின் இணைகிறோம் | அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட சூர்யா

நடிகர் சூர்யா, பிரபல இயக்குனருடன் 20 ஆண்டுகளுக்கு பின் இணைய உள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தமிழ்...

‘யானை’ படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்

ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘யானை’ படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார்.

மேலும் பதிவுகள்

வியப்பூட்டும் உண்மை வரலாறு | மலையூர் மம்பட்டியான் நிஜக்கதை

சந்தன கடத்தல்காரன் வீரப்பனைப்போல, 50 ஆண்டுகளுக்கு முன்பு போலீசாருக்கு சிம்ம சொப்பனமாக விளங்கி, மக்களிடம் பரபரப்பாகப் பேசப்பட்டு வந்தவன் மம்பட்டியான்.*

இரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் ‘மோகன்தாஸ்’ பட செகண்ட் லுக்

'களவு' என்ற படத்தைத் தொடர்ந்து இயக்குநர் முரளி கார்த்திக் இயக்கத்தில் தயாராகிவரும் புதிய திரைப்படம் 'மோகன்தாஸ்'.  இப்படத்தில் நடிகர் விஷ்ணு...

இராணுவத்திடமிருந்த 11 ஏக்கர் காணி மக்களின் பாவனைக்காக கையளிப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பகுதியில்  இராணுவ வசம் இருந்த 11 ஏக்கர் காணிகள் அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளன. முல்லைத்தீவு...

இலங்கை கடலில் உயிரிழந்த இந்திய மீனவரின் சடலம் ஒப்படைப்பு

இலங்கை கடற்பரப்பில் இடம்பெற்ற படகு விபத்தில் உயிரிழந்த இந்தியாவின் தமிழக மீனவரின் சடலம் இந்திய கடலோர காவல் படையியடம் கையளிக்கப்பட்டுள்ளது.

கடாபியின் நிலைமை கோட்டாவுக்கும் வரும் என்கிறாரா விமல்?

அரசியல் ரீதியில் தீர்மானமிக்க பயணத்தை நோக்கி பயணிக்கிறோம். டொலருக்காக  மனசாட்சிக்கு விரோதமாக அரசியல் செய்ய முடியாது. ஆகவே ஒன்றிணைந்த...

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்த சவுந்தர்யா ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகளான சவுந்தர்யா ரஜினிகாந்த், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றிருக்கிறார். இளைய...

பிந்திய செய்திகள்

இந்தியாவில் அக்னி-5 ஏவுகணை பரிசோதனை வெற்றியடைந்துள்ளதாக அறிவிப்பு!

கண்டம் விட்டு கண்டம் தாண்டி இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் அக்னி -5 ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஏவுகணை பரிசோதனை ஒடிசா...

ஒலுவில் மூலம் அம்பாறைக்கு வளமான எதிர்காலம் உருவாக்கப்படும்!

ஒலுவில் துறைமுகத்தினை மீன்பிடிச் செயற்பாடுகளுக்காக விரைவில் திறக்கப்படும் என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்படுகின்ற அனைத்து சட்டவிரோத தொழில் முறைகளுக்கும் முடிவு கட்டப்படும் எனவும் தெரிவித்தார்.

இலங்கையின் பொருளாதார மறுமலர்ச்சிக்கு சீனாவிடமிருந்து கிடைக்கும் ஒத்துழைப்பிற்கு பிரதமர் பாராட்டு!

இந்நாட்டின் பொருளாதார மறுமலர்ச்சிக்கு சீனாவிடமிருந்து கிடைக்கும் தொடர்ச்சியான ஒத்துழைப்பு தொடர்பில் இலங்கைக்கான சீன தூதுவர் சீ.ஷென்ஹொன் அவர்களின் முன்னிலையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தனது பாராட்டினை தெரிவித்தார்.

கர்நாடகாவில் கொரோனா தொற்றின் புதிய திரிபு கண்டு பிடிப்பு!

கர்நாடகாவில் கொரோனா தொற்றின் புதிய வைரஸான AY 4.2 பரவி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. குறித்த வைரஸ் தொற்றினால் இதுவரை ஏழு பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

தமிழர்களையும் முஸ்லிம்களையும் இந்த நாட்டில் இருந்து விரட்டுவதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றதா?

மிக மோசமான இனவாதியைக் கொண்டுவந்து ஒரே நாடு ஒரே சட்டம் என்று சொல்லச் சொன்னால் தமிழர்களையும் முஸ்லிம்களையும் இந்த நாட்டில் இருந்து விரட்டுவதும், அவர்களுக்கு எதுவுமே இல்லாமல் செய்வதுதான் இவர்களது...

உடலுக்கு ஆரோக்கியமான பூண்டு சட்னி

இப்பொழுதெல்லாம் காலை உணவு, மதிய உணவு, இரவு உணவு என மூன்று வேளையும் மூன்று விதமான உணவுகளை சமைக்க வேண்டி இருக்கிறது. காலை...

துயர் பகிர்வு