பெண்கள் என்றாலே அவர்களின் அழகைப் பராமரிப்பதிலேயே அதிக நேரத்தை எடுத்து கொள்வார்கள். அவ்வாறு அழகாக இருக்க விரும்பும் பெண்களுக்கு பயனுள்ள ஒரு குறிப்புக்கள் இதோ .
நாம் அனைவரும் அடிக்கடி வீட்டில் பயன்படுத்தும் பொருள் எலுமிச்சைப்பழம் ஆகும் . இதை நாம் சாற்றை பிழித்து எடுத்து விட்டு தோலை எரிந்து விடுவதுண்டு ஆனால் இந்த தோலில் சாற்றை போன்று பல மடங்கு நன்மை அடங்கி உள்ளது என்றால் நம்புவீர்களா.
உச்சி முதல் பாதம் வரை அழகைப் பராமரிப்பதில் எலுமிச்சை தோல் முக்கியப் பங்கு வகிக்கின்றது.
இதில் விற்றமின் , தாதுக்கள் ,நார்சத்து ,பொட்டாசியம் ,கல்சியம் மற்றும் ஆன்டி ஆக்சிடண்டுகள் அதிகமாக உள்ளது என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
எலுமிச்சை தோலின் நன்மை பல , பற்களுக்கு உறுதி அளிக்கும் உடலில் உள்ள குறுத்தெலும்புகள், தசைநார்கள் , தோல்,ஹார்மோன் சுரப்பியின் சீரான செயல்பாட்டுக்கு உதவும். இத்தகைய எலுமிச்சம் தோலை எப்படி பயன்படுத்துவது என்று தெரியுமா?
எலுமிச்சம் பழத்தோலை குளிக்கும் தண்ணீரில் போட்டு வைத்து சிறிது நேரம் கழித்து குளித்தல் உடலுக்கு புத்துணர்ச்சியாக இருக்கும்.
அக்குள்,தொடை இடுக்குகளில் உள்ள கருமையை நீக்க தேங்காய் எண்ணையை பூசி எலுமிச்சை தோலால் தேய்க்க சிறிது காலத்தில் கருமை நீக்கும்.
எலுமிச்ச்சம் தோல் , புதினா இல்லை இரண்டையும் அரைத்து முகத்தில் பூசி வந்தால் சருமத்தில் உள்ள அலுக்கு நீங்கி விடும்.
முகம் கை காலில் உள்ள இறந்த செல்களை நீக்க 3 டீஸ்பூன் எலுமிச்சை தோலை பொடி செய்து பூசி, 3 டீஸ்பூன் ஓட்ஸ் பொடி ,2 டீஸ்பூன் தேன் ,2 டீஸ்பூன் ரோஜா பன்னீர் இவை அனைத்தையும் பசை போல கலக்கவும் பின் பூசிவிட்டு 10 நிமிடம் கழித்து குளி க்க நல்ல பயன் கிடைக்கும்.