Thursday, April 25, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் யுவான்களைக் கைவசம் வைத்திருங்கள் | ஈழவாசன்

யுவான்களைக் கைவசம் வைத்திருங்கள் | ஈழவாசன்

1 minutes read

மாண்டரின் மொழியில்
ஐ லவ் யூ சொல்லக்
கற்றுக்கொள்ளுங்கள்;
வளைந்த மூக்கின்
நிமிர்ந்த காதல்
உங்களைத் தேடி வரக்கூடும்!

எப்போதும் யுவான்களைக்
கைவசம் வைத்திருங்கள்;
ரூபாய் செல்லாது என்ற
அறிவிப்பு திடீரென
வெளியாகக்கூடும்!

பாம்புகளையும்
கரப்பான்களையும்
கண்டு அஞ்சுகின்ற
நம் பெண்களுக்கு
சுயதொழிலின் இரகசியத்தைச்
சொல்லிக்கொடுங்கள்;
ஊர்வனவும் பறப்பனவும்
தொழிலதிபராக்கக்கூடும்!

அயல்நாட்டில் தஞ்சம் புகுந்து
தனிநாட்டுக் கோரிக்கையைச்
சுயாட்சிக்குள் சுருக்கிய
தலாய் லாமாவின் கதையை
உங்கள் பிள்ளைகளுக்குச்
சொல்லிக்கொடுங்கள்;
எங்களைப்போலவே நீங்களும்
நாடற்றவராக்கப்படக்கூடும்!!!

ஈழவாசன்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More