
நடுகல் நாவலின் சிங்கள மொழியாக்கமான ‘ஸ்மாரக்க ஷிலாவத்த’ எனும் புத்தகம் குறித்து இணைய வழியில் விமர்சனக் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.
எதிர்வரும் 26ஆம் திகதி இரவு ஒன்பது மணிக்கு இந்த உரையாடல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதில் ஊடகவியலாளர் மற்றும் எழுத்தாளர் பாஷண அபேவர்த்தன, கவிஞர் மஞ்சுள வெடிவர்த்தன, எழுத்தாளரும் மொழியாக்கக் கலைஞருமான சரத் ஆனந்த மற்றும் எழுத்தாளர் கத்யானா அமரசிங்க மற்றும் நாவலாசிரியர் தீபச்செல்வன் உள்ளிட்டோர் உரையாற்றுகின்றனர்.
தீபச்செல்வன் எழுதிய நடுகல் நாவல் சிங்களத்தில் ‘ஸ்மாரக்க ஷிலாவத்த’ எனும் தலைப்பில் சிங்கள எழுத்தாளர் ஜீ.ஜீ. சரத் ஆனந்தவினால் மொழிபெயர்க்கப்பட்டு கடுல்ல பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ள நிலையில் குறித்த நாவலுக்கு சிங்கள வாசக மக்கள் மத்தியில் ஆதரவு பெருகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.