செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் கூழாங்கல் | முல்லையின் ஹர்வி

கூழாங்கல் | முல்லையின் ஹர்வி

1 minutes read

அவளின் புன்னகையின்
விலை கேட்கிறேன்
விலைமதிக்க முடியாத பொக்கிசம் என அறிந்த பின்னும்……..!!!!!!

சுருங்கிய தோல் அவளின் முதுமையின் அடையாளம்
விரிந்த கை அவளின் ஆதரவற்றதுக்கு அடையாளம்

இரத்த கலதியில்
பிரசவித்த பிள்ளைகளுக்காகவே
வெயிலும் வேர்வையும் பாராமல்
தன் மேனியை வருத்துகிறாள்
அழகு நடை பார்த்து
ஆயிரம் சட்டை உடுத்தி
அணுவணுவாய் வளர்க்கிறாள்…

மார்பிலே அணைத்து, சேலையில் ஊஞ்சல் கட்டி,
நிலா ஒளியிலே சோற்றுக் கீரை பிசைந்தவளின் கைகள் ஓய்வுக்கு தயாராகிக் கொண்டிருக்கின்றன

உடலுக்கும், உணவுக்கும் பசியை தனியாக தேடிய பின் அவளுக்கு
ஒரு வேளை உணவு…
ஓரமாய் படுக்கை….
பராமரிக்க நேரமில்லை
என்றெண்ணி முதியோர் இல்லத்திற்கு இருப்பிடச் சேர்க்கை…

கழுத்து வலி சுமக்க ஏறிய கயிற்றை பாரம் என்று அகற்றியவளுக்கு
தன் உழைப்பில்
வாழ்வதொன்றும் புதிதல்ல..
முதுமையை மறந்தவளாய்,
தெரிவிலே தான் வாழ துணிகிறாள்….

காடும் மேடும் கடந்து வெட்டிய விறகுப்
பணத்தில் கஞ்சிக் கூழ் தந்தவளின் கைகளில் பிச்சைத்தட்டு பாரமாகிக் கிடக்கிறது…..

கை நீட்டிப் பிச்சை எடுத்தாலும்
அவள் கண்களில்
சிறிதேனும் கவலை இல்லை
மனதிலே ஏக்கம் இல்லை ஆயினும்-
இன்னும் சாறி முனையில் சில சில்லறையும், தாள்களையும் சேமிக்கின்றாள் தன் பிள்ளைகளின் முதுமைக்காக…..!!!!!!!

இருக்கும் போதவளை ஒதுக்கி விடாதீர்கள்
முதுமை நமக்கானதுமே….!!!!!

(அன்பு அன்னையர்க்கு
அன்னையர் தின நல்வாழ்த்துகள்)

முல்லையின் ஹர்வி

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.