செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் வலிதந்த வானரங்கள் | கேசுதன்

வலிதந்த வானரங்கள் | கேசுதன்

1 minutes read

வலியுணரா வானரங்கள் வம்சமழித்த கொடூரன்
உலகமும் உற்று நோக்கியதோ செம்மண் புழுதி
கரிவாள் முனையில் காகிதமாய் கிழிந்தொழிந்த
பெண்புறாக்கள் செல்கள் சிதறிய உடலும் ஊனமாய் ஈ மொய்த்து கருங்குழல் வெடியால் விடியலொளித்த
கயவன்
அனாதையாக வெண்சிலைகளும் சுக்குநூறாய் சிதைந்ததென்னவோ நெஞ்சில் பற்றிய கனவுகளும் கனவாய் போயின சேனையன் செவிடான் -அவன்
குழறிய குரல்களும் கேட்டிடுமோ அவன் காது
பிஞ்சி நெஞ்சில் சூடிய நாமம்
பயங்கரவாதி

நாமத்தின் உணர்வறியா கடையன் திசையெங்கும் கொன்று குவித்தான் குண்டு மழையால்
வாசனைநுகரா வஞ்சகன் வம்சம் சீரழிக்க புகுந்தான் நுண்ணுயிரான்

வானரங்கள் வானவேடிக்கையாம் குலத்தொழில் சொல்லாது சிறப்பெய்தினான்
மாசற்ற மங்கைகளும் மானிடனாய் தோன்றவில்லை
கூண்டோடு கொலையாடினான்
கள்வன்

ஆறசினம் கொண்ட அரசியல் கயவன் காற்றோடு கைவீசி தொலைதூர ரசனை அனுபவிப்பான் போல் துள்ளினான்
சிறகொடிந்த பறவையாய் புதைகுழியறியா ஜீவனது மண்ணோடு மண்ணாய் கனவுகளும்
காலமிழந்தது

கொடியவன் கோட்டை சிதைத்து பிணம் தின்னும் கழுகின் இறக்கையோடித்து அணுஅணுவாய் ரசிக்க துடித்த நெஞ்சமும் கொந்தளிக்க
மனமுடைத்து நம்மவர் வலி பிறர் தொடராதென மறுத்தான் புலிமறவன்

வஞ்சனையில் சிக்கிய செஞ்சோலை தெய்வங்கள் – நம் காலங்கள் தொடரும் உம் கனவெனும்
காவியங்கள்..

கேசுதன்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.