செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் பயம் பயம் | ‘ஆச்சியின் பேத்தி’ ரேணுகா உதயகுமார்

பயம் பயம் | ‘ஆச்சியின் பேத்தி’ ரேணுகா உதயகுமார்

0 minutes read

எழுத்துக்கு பயம்
எழிச்சிக்கு பயம்…

பாட்டுக்கு பயம்
படத்துக்கு பயம்…

கொடிக்கு பயம்- ஒன்று
கூடலுக்கு பயம்…

இசைக்கு பயம்
இயக்கத்துக்கு பயம்…

காத்திகைக்கு பயம்
காத்திகை பூவுக்கும் பயம்..

வரிக்கு பயம்
வரி உடுப்புக்கு பயம்…

சிவப்பு மஞ்சலுக்கு பயம்
சீறும் மிருகத்துக்கு பயம்…

நூலுக்கு பயம்
நூலகத்துக்கு பயம்…

புத்தகத்துக்கு பயம்-முக
புத்தகத்துக்கு பயம்…

குரலுக்கு பயம்
குத்தாட்டத்துக்கு பயம்…

பேனாக்கு பயம்-மேடை
பேச்சுக்கு பயம்……

மையிக்கும் பயம்
மயானத்துக்கும் பயம்…

‘ஆச்சியின் பேத்தி’ ரேணுகா உதயகுமார்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.