தாமரை மலர்ந்ததம்மா ;
தியானமோ கலைந்ததம்மா..!
கண்களும் கவியென
காதலும் பிறந்திட-
நாடியோ நடுங்குதம்மா ;
நாணமோ தடுக்குத்தமா..!
கருமையின் அழகென
கார்குழல் கூந்தலில் –
மல்லிகை மணக்குதம்மா;
மயக்கமோ இனிக்குதம்மா..!
வில்லெனும் புருவமும்
விண்மீன் கண்களும் –
ஆசையை காட்டுதம்மா ;
ஆதிக்கம் செய்யுதம்மா .!
சிவந்திடும் கன்னமும்
சிருங்கார மேனியும் –
சிறுதாவணி மறந்தபடி;
சேலைக்கு துடிக்குதம்மா..!
கொடியிடை நடையதும்
கோபுரக் குழியதும் –
விடுகதை சொல்லுதம்மா ;
விரதமோ கெஞ்சுதம்மா..!
ஒருகண பார்வையில்
உலகத்தை மறந்திட –
மந்திரம் செய்துவிட்டாய்;
முழுவியந்திரம் ஆக்கிவிட்டாய்..!
வளர்ந்திடும் வயதில்
வாலிபம் என்பதை –
வரவால் தெரிந்துகொண்டேன் ;
வரவோ காதலென்றேன்..! – உனை
பார்த்ததும் எனை மறந்தேன்………!
என்றும் காதல் வாழும் அன்புடன்
ஜாக் ஜெ ஜீ
நன்றி : எழுத்து.காம்