Wednesday, February 24, 2021

இதையும் படிங்க

சயந்தனின் ‘ஆதிரை’ | நாவல் விமர்சனம் | ரூபன் சிவராஜா

சயந்தனின் 2வது நாவல் ஆதிரை அண்மையில் வாசித்தேன். 2015இல் வெளிவந்த நாவல். 664 பக்கங்கள். மலையக மக்களின் வாழ்வியல் நெருக்கடிகளைப் பேசுவதனூடு கதை தொடங்குகின்றது. 1977 கலவரத்தினை அடுத்து வன்னிக்குச்...

சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் இலங்கையை நிறுத்த முடியுமா? | சுரேஷ் செவ்வி

(நேர்காணல்:- ஆர்.ராம்)  இலங்கையின் பொறுப்புக்கூறலை செய்விப்பதற்காக அதனை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்குச் கொண்டு செல்வதற்கு முன்னதாக பல படிகளைத் தாண்ட வேண்டியுள்ளதாக ஈழமக்கள் புரட்சிகர விடுதலை...

ஈழ எழுத்தாளர் டொமினிக் ஜீவா காலமானார்

“மல்லிகை” ஆசிரியர் டொமினிக் ஜீவா தனது 94வது வயதில் இன்று 28.01.2021 மாலை காலமானார். டொமினிக் ஜீவா...

மீண்டும் சிரித்திரன் இதழ்!

ஈழத்து இதழியல் வரலாற்றில் மிக முக்கியமான இதழாக வெளிவந்தது சிரித்திரன் இதழ். சிரித்திரன் சுந்தர் எனப்பட்ட திரு. சி. சிவஞானசுந்தரம் நடாத்திய இந்த இதழ் மீண்டும் வெளியாக உள்ளது.

கவிஞர் அலறி எழுதிய ‘துளி அல்லது துகள்’ நூல் அறிமுக விழா!

நூருல் ஹுதா உமர் கவிஞர், எழுத்தாளர் சட்டத்தரணி, அரசியல் பிரமுகர் என பல்முக ஆளுமை கொண்ட அலறி என...

தனுஜா – ஈழத் திருநங்கையின் பயணமும் போராட்டமும் முருகபூபதி

“ உனக்கு ஜமாத் இருக்கிறதா தனுஜா…? “ எனக்கேட்டார் சுந்தரிப்பாட்டி.எனக்கு ‘ஜமாத் ‘ என்றாலே என்னவென்று தெரியவில்லை. சுந்தரிப்பாட்டி , திருநங்கை ஜமாத்தைப்பற்றி எனக்கு டொச் மொழியில் விளக்கினார். “இவ்வாறு...

ஆசிரியர்

கவிதை தான் எனது ஆன்மா: கவிஞர் தேன்மொழிதாஸ் வணக்கம் லண்டனுக்கு நேர்காணல்

உங்களைப் பற்றி சிறிய அறிமுகம்?

எனக்கென என்ன அறிமுகம். ஏழு வயது முதல் கவிதை எழுதுவது தொடங்கி.. தன் பதினைந்து வயது வரை எழுதிய கவிதைகள் பலவற்றில் இருந்து 1996 முதல் இலக்கியத்தில் பல சிறு பத்திரிகைகள் வழியாக கவிஞர் என அறிப்பட்டவர். முதல் தொகுப்பு இசையில்லாத இலையில்லை 2000 ல் வெளியானது

கவிஞர், திரைப்பட பாடலாசிரியர் இந்த இரண்டு அடையாளங்களில் எது உங்களுக்கு பிடிக்கும்?

கவிதை தான் எனது ஆன்மா. கலைகளிலே ஆகச்சிறந்த கலை எழுத்து. அதிலும் கவிதை என்பதே முதன்மையான நுண்கலை . இப்பிறவியில் மொழியிலே ஆதியாம் தமிழில் போற்றுதலுக்குறிய கலையில் வாழ்கிறேன் என்பது மட்டுமே பெரும் பேறு. கவிதை காலம் இரண்டும் வேறு வேறு அல்ல நான் அறிந்த கலைகளிலே தெவிட்டாத கலை கவிதை மட்டுமே.

No photo description available.

இப்போது திரைப்படங்களில் பாடல்கள் எழுதுவதில்லையா? திரைப்பட பாடல் அனுபவங்கள் குறித்து கூறுங்கள்.

இப்போதும் பாடல்கள் எழுதுகிறேன். இரண்டு நாட்களுக்கு முன்பு கூட எனது பாடல்கள் அடுத்த சாட்டை என்ற படத்தில் வெளியானது . வெளியீடு முடிந்த மறுநாளே அது வெற்றிப் பாடல் என்ற சேதி எட்டியது. ஆயினும் வாய்ப்புகளை தேடிச் செல்வதில்லை . காரணம் கவிதைகளில் நான் நிறை மனநிலை கொள்வதால் கிட்டும் வாய்ப்பிற்கு மட்டுமே எழுதுகிறேன்.

ஏன் தேன்மொழிதைாஸை சுற்றி ஒரு சோகம், தனிமை சூழ்ந்திருக்கிறது? அது உண்மைதானா?

இளமையில் தனிமை கொடியது என்றாள் அவ்வை இளமையில் தனிமை இனிது என்கிறேன் இது எனக்கான அடையாளத்தை.. நித்தியத்தின் பாதையை.. வாழ்வின் மெய்யை.. இறைமையை ஆன்மநேயத்தை மனித நேயத்தை கற்கவும் எழுதவும் அதன்படி வாழவும் வழிவகுத்தது .. நூற்றாண்டுகள் தாண்டி பிறக்கப் போகும் தமிழ் மக்களுக்கும் ..எனது ரத்தமும் மனமும் இங்கே வார்த்தைகளை ஜீவத் தண்ணீராய் விட்டுச் செல்ல வேண்டும் என்பது ஆன்ம உறுதியாக இருக்கிறது. எனது எழுத்தின் நோக்கம் நம் மக்களின் மீதும் மண்ணின் மீதும் தீராக் கருணை கொண்டது. எனது எழுத்திற்கென்று ஒரு கோட்பாட்டை வகுத்துக் கொண்டேன்

Image may contain: 1 person, closeup

ஒடுக்குமுறையில் இருந்து தான் எரிமலையாக விளைந்தேன்
ஆயினும்
எனக்கு இழைக்கப்பட்ட துரோகத்தில் இருந்து தர்மத்தை
நான் எதிர்கண்ட மரணங்களில் இருந்து அன்பின் ஆழத்தை
எல்லா உயிர்களிடமிருந்தும் வாழ்விற்கான பாடத்தை
இயற்கையிடமிருந்து நுண்ணறிவை கனவுகளிலும் கற்பனைகளிலும் இருந்து பல தரிசனங்களையும் பெற்றேன்
பஞ்சபூதங்களிலிருந்தும் மாயைகளிலிருந்தும் பிரபஞ்ச சக்தியை அறிந்து
அநீதிகளில் இருந்து உலகநீதிக்கான கொள்கையை எனக்குள் உருவாக்கி
பசிகளிலிருந்து விடுபட்டு தியானத்தைப் பழக்கினேன்
உள்ளே ஒலியாகவும் ஒளியாகவும் தகிக்கும் உடல்களை மொழியால் இயக்கி
கவிதைலிருந்து எனது உலகை படைத்துக் கொண்டேன்
எனது நெறி தசைகொண்டே துடித்திடினும்
அது அகத்தில் மெளனமாயிருந்து எழுத்தில் பிரசன்னமாகிறது
இயற்கையே எனது தொழுகை
இயற்கையோடு இயற்கையாக வியாபித்து இருத்தல் எனது நிலை
சொல்லை உயிர்ப்பித்தல் எனது தொழில்
தமிழ் எனது பெரும் பேறு
சமத்துவம் எனது மூலக் கொள்கை
சித்தம் எனது மதம்
ஆன்ம நேயமே எனது மார்க்கம்
கருணையே கடவுள்
– தேன்மொழி தாஸ்

புதிய முயற்சிகள் எதில் ஈடுபட்டு வருகிறீர்கள்?

புதிய முயற்சி என்று எழுத்தைத் தாண்டி ஒன்றும் இல்லை. இவ்வாண்டு நான் ஏற்கனவே எழுதி வைத்திருக்கும் கதைகளை வெளியிட வேண்டும். நாவல்கள் எழுத நேரம் ஒதுக்க வேண்டும் என்று தோன்றுகிறது. மொழியின் மூலம் நாம் எல்லா போராட்டங்களுக்குள்ளும் பயணிக்க முடியும் அன்பிற்கென நடப்பதே இவ்வுலகில் வலிமையான போராட்டம்.

எழுத்து என்பது அஷ்டமுகம்  கூராக்கப்பட்ட ஒரு விசித்திரமான ஆயுதம்.

Image may contain: 1 person, smiling, closeup

தேன்மொழிதாஸ் தமிழக கவிஞர் மற்றும் திரைப்பட பாடலாசிரியர். இசையில்லாத இலையில்லை (2000) அநாதி காலம் (2002) ஒளியறியாக் காட்டுக்குள் (2007) நிராசைகளின் ஆதித்தாய் (2014) காயா (2016) வல்லபி (2017) முதலிய தொகுப்புக்களை வெளியிட்டவர். 60இற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பாடல்களை எழுதியவர்.

 

நேர்காணல் மற்றும் தொகுப்பு – வணக்கம் லண்டனுக்காக தீபன்

இதையும் படிங்க

மாணவர்களுக்கு படித்தபடி கிரிக்கெட் விளையாடும் வாய்ப்பு வேண்டும் | அரவிந்த டி சில்வா

இலங்கை கிரிக்கட்டின் தொழில்நுட்ப ஆலோசணைக்குழுவின் தலைவரான அரவிந்த டி சில்வா, தங்களுடைய குழுவின் நோக்கங்கள் பற்றியும் நாட்டில் கிரிக்கட்டை மேம்படுத்த வைத்துள்ள திட்டங்கள் பற்றியும் அண்மையில் தனியார் தொலைக்காட்சியொன்றிற்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்திருந்தார்.

சயந்தனின் ‘அஷேரா’ நாவல் | யூட் பிரகாஷ்

ஆறாவடு. ஆதிரை, வரிசையில் வாசிக்கும் சயந்தனின் மூன்றாவது நாவல் தான் அஷேரா. யூதர்களின் ஒற்றைக் கடவுளான யாஹ்வேயிற்கு ஒரு...

காதலர் தினம் பற்றி எழுத்தாளர் சுஜாதா எழுதிய குறிப்பு!

40 லட்சம் வருஷங்களுக்கு முன் ஆப்பிரிக்கச் சமவெளிப் பகுதியில் காதல் பிறந்தது என்கிறார்கள். அப்போதுதான் மூளையில் இருந்து முதல் நியூரோ கெமிக்கல்கள் மனித ரத்தத்தில் பாய்ந்து காதலின் காரணத்தால் அசட்டுச்...

வடக்கில் இருந்தது தமிழ்பௌத்தம் | பேராசிரியர் புஷ்பரட்ணம்

பௌத்தம் வட இந்தியாவில் இருந்து ஏனைய நாடுகளுக்கும் பரவிய போதும் இலங்கைக்கும் பரவியது அப்போது இலங்கையில் இருந்த பெருங்கற்கால மக்கள் அல்லது ஆதிகால மக்களில் ஒரு பிரிவினர் அம்மதத்தை ஏற்றுக்...

‘கிழக்கு கொள்கலன் முனைய தீர்மானத்தில் மாற்றமில்லை’ | ஜெனரல் தயா ரத்நாயக்க

(நேர்காணல்:- ஆர்.ராம்)கிழக்கு கொள்கலன் முனையத்தின் முழு உரித்தும் இலங்கையிடமே இருப்பதோடு துறைமுக அதிகார சபையின் கீழேயே அது அபிவிருத்தி செய்யப்படுமென தற்போது எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்தில் ஒருபோதும் மாறாது என்று துறைமுக...

காத்திருப்பு | யூட்பிரகாஷ்

வாழ்க்கை என்பதே முதல் காத்திருப்பிற்கும் இறுதி காத்திருப்பிற்கும் இடையில் அனுபவிக்கும் காத்திருப்புக்களின் தொகுப்பு தான். பிறப்பு என்ற முதற்...

தொடர்புச் செய்திகள்

மிருசுவில் படுகொலை | திகிலூட்டும் ஒரு இனக்கொலையின் கதை!! | தீபச்செல்வன்

    அரசியல் கைதிகள் என்று எவரும் இல்லை என இலங்கை அரசின் ஆளும் கட்சியினர்...

சினிமா என்பது கணத்திற்கு இருபத்தி நான்கு சட்டங்களாகச் சரியும் உண்மைகள்!

உலக சினிமாபிரான்சின் புதிய அலை: பகுதி 2வரலாறு மறுமலர்ச்சி யுகம் 23 தனது சினிமா குறித்த புதிய கோட்பாடுகளை உலகிற்கு அறிவிக்கும்விதமாக 1951ல் “கையேது...

ரசிகர்கள் மனத்தில் ‘தல’ என்று நிலைத்திருக்கும் அஜித்

எந்தவொரு சினிமாப் பின்னணியும் இல்லாமல், தமிழ்த் திரையுலகில் நுழைந்து, தனது கடின உழைப்பால் முன்னேறி, தனக்கென ரசிகர்கள் கூட்டத்தைத் தனது நடிப்பால் உருவாக்கி,...

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

கார் விபத்தில் மீண்டும் சிக்கினார் கோல்ப் வீரர் டைகர் வூட்ஸ்

அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் செவ்வாய்க்கிழமை நடந்த ஒரு பெரிய கார் விபத்தில் கோல்ப் வீரர் டைகர் வூட்ஸ் காயமடைந்துள்ளதாக லொஸ் ஏஞ்சல்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சர்வதேச நீதி கோரி வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டம்

வவுனியாவில் தமிழர்தாயக காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தினரால் முன்னெடுக்கப்பட்டுவரும் சுழற்சிமுறையலான உணவுதவிர்ப்பு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் நான்கு வருடங்கள் பூர்த்தியாகியது. இதனையடுத்து...

தரங்கவின் திறமைகள் பல தேசிய வெற்றிகளுக்கு பங்களித்துள்ளன | இலங்கை கிரிக்கெட்

உபுல் தரங்கா தனது தொழில் வாழ்க்கையில் இலங்கை கிரிக்கெட்டுக்கு ஒரு சிறந்த சேவையைச் செய்துள்ளதுடன், அவரது திறமைகள் பல தேசிய அணி வெற்றிகளுக்கு பங்களித்தாக இலங்கை கிரிக்கெட்டின் தலைமை நிர்வாக...

மேலும் பதிவுகள்

இலங்கை கிரிக்கெட்டில் மீண்டும் டொம் மூடி?

இலங்கை அணியின் மிக வெற்றிகரமான கிரிக்கெட் பயிற்சியாளரான தாமஸ் மோசன் மூடி கிரிக்கெட் இயக்குநர் என்ற புதிய பணிக்காக கொழும்புக்கு வருகை தரவுள்ளார்.

“ஃபுட்போல் ஃப்ரைடே”!

இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் "ஜெயகமு" நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் ஒழுங்கமைக்கப்பட்டுள்ள இரண்டாவது விளையாட்டு நிகழ்ச்சித்தொடர் "ஃபுட்போல் ஃப்ரைடே" ஆகும்.   இந்த கொரோனா பேரிடர் காலத்தில் மக்கள்...

‘சமிந்தவாஸின் செயற்பாடு எனக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது’

சம்பள கொடுப்பனவுகள் தொடர்பில் சமிந்த வாஸிற்கு ஏதேனும் நெருக்கடிகள் இருப்பின் அதனை கேட்கும் முறையொன்று உள்ளது. இலங்கை கிரிக்கெட் தேசிய அணி தனது சுற்றுப்பயணத்தை ஆரம்பிக்க நான்கு மணி நேரத்திற்கு...

வாய்ப்பல்ல, வாழ்க்கை கொடுத்தவர் | தனுஷை புகழ்ந்த பிரபலம்

வாய்ப்பு கொடுக்கவில்லை; வாழ்க்கை கொடுத்திருக்கிறார் என்று பிரபல காமெடி நடிகர் ஒருவர் தனுஷை புகழ்ந்த பேசி இருக்கிறார்.தனுஷ்தனுஷ் ரசிகர் ஒருவர் உணவகத் திறப்பு விழா ஒன்றை நடத்தினார். இதில் நடிகர்...

ஐ.பி.எல். ஏலத்தில் இருந்து விலகும் மார்க் வூட்!

ஐ.பி.எல். ஏலத்தில் இருந்து தான் விலகிக்கொள்வதாக இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் மார்க் வூட் தெரிவித்துள்ளார். தன்னுடைய குடும்பத்துடன் மேலதிக...

எனக்காக கட்டிய கோயிலை இதற்காக பயன்படுத்துங்கள் | நிதி அகர்வால் வேண்டுகோள்

கோவில் கட்டும் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுக்கும் வகையில், நடிகை நிதி அகர்வால், அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.நிதி அகர்வால் சிலையை வழிபடும் ரசிகர்தெலுங்கு நடிகை நிதி அகர்வால் பூமி படம் மூலம்...

பிந்திய செய்திகள்

ஆஸ்திரேலியாவில் பாலியல் பொம்மை விவகாரத்தில் சிக்கிய வெளிநாட்டு மாணவர்!

ஆஸ்திரேலியாவில் வசிக்கும் சிங்கப்பூர் மாணவர் ஒருவர் குழந்தை பாலியல் தொடர்பான பொம்மை ஒன்றை இறக்குமதி செய்த குற்றத்திற்காகவும் குழந்தைககள் தொடர்பான தகாத புகைப்படங்கள்/ பொருட்கள் வைத்திருந்ததற்காகவும் அவருக்கு 11 மாத...

புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சி!

புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. புதுச்சேரியில், முதல்வர் நாராயணசாமி மற்றும் அவரது அமைச்சரவையின் இராஜினாமாவை...

மீண்டும் நடிக்க வரும் நதியா!

நடிகை நதியா 5 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் லிங்குசாமி இயக்கும்  திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழில் ‘பூவே பூச்சூடவா’...

ஸ்ரீதேவியின் சில நினைவுகள் | வைரலாகும் ராம் கோபால் வர்மாவின் கடிதம்!

மறைந்த நடிகர் ஸ்ரீதேவியின் நினைவு தினம் இன்று (புதன்கிழமை) அனுஷ்டிக்கப்படுகிறது. இந்நிலையில் ஸ்ரீதேவி குறித்து இயக்குனர் ராம் கோபால் வர்மா...

ஜெயலலிதாவின் பிறந்தநாளில் அவரை நினைவு கூர்ந்தார் மோடி

ஜெயலலிதா தமிழக அரசியல் வரலாற்றில் மிகப்பெரிய வெற்றிகளை மட்டுமல்லாது மிகப்பெரிய தோல்விகளையும் எதிர்கொண்டவர்.  மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின்...

இளம் பெண் சமூக ஆர்வலர் திஷா ரவி விடுதலை

இந்தியாவில் கைது செய்யப்பட்ட இளம் பெண் சமூக ஆர்வலர் திஷா ரவி விடுதலையானார். இந்திய மத்திய அரசின் மூன்று விவசாய...

துயர் பகிர்வு