Friday, April 26, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் வீட்டின் நியமம் | க. சம்பத்குமார் கவிதை

வீட்டின் நியமம் | க. சம்பத்குமார் கவிதை

0 minutes read

ஒரு சிறுவனால்
தனதினிய விருப்பங்களை
அவ்வளவு சுலபமாக
வீட்டிற்கு அழைத்து
வர முடிவதில்லை

நாடகத்தைப் போன்ற
விளையாட்டுகளை
மந்திரக்காரனைப் போல
சாகச வித்தைகளை
குழந்தை விரும்பி நிகழ்த்தும்
பறவையின் குரலை
கடலின் ஒலத்தை என
அனைத்தையும்
வெறுத்து ஒதுக்குகிறது
வீட்டின் நியமம்

ஆயினும்
பெரியவர்களுக்கு
விருப்பம் என்பதாலேயே
வீட்டில் உலவித் திரிகிறது
புறம் கூறலும் இன்ன பிறவும்
எவ்வித நியமுமின்றி.

க. சம்பத்குமார்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More