
அந்த நாற்றத்தை
நாங்கள்
மூன்று தலைமுறையாக
அனுபவிக்கிறோம்
என்றார் பெரியவர்.
நல்ல மாட்டுக்கு
ஒரு சூடு போதும்.
இந்த மாடுகளை
என்னதான் செய்வது?
கால்களைப் பிணைத்து
லாடம் அடித்து
நாணயக் கயிற்றை
இறுக்கிக் கட்டி
எரு ஏற்றிப்
பாரம் இழுக்க வைத்தால்
எல்லாம் சரிவரும்.
இல்லாவிடில்
குறி சுருங்கும்வரை
சூடுவைக்க வேண்டியதுதான்!
21012022