மானம் எல்லாம் இழந்து வாழ்வதும் ஒரு வாழ்வா? | பா.உதயன்

மானம் எல்லாம் இழந்து
வாழ்வதும் ஒரு வாழ்வா தமிழா
மானம் எல்லாம் இழந்து வாழ்வதும்
ஒரு வாழ்வா தமிழா

மரணத்தில் நின்றும்
மானம் ஒன்றே பெரிதெனக்கொண்டு
வாழ்ந்தவன் தமிழனெல்லோ
மானம் எல்லாம் இழந்து
வாழ்வதும் ஒரு வாழ்வா தமிழா

உயிரைக் கொடுத்து சென்றான் ஒருவன்
அவன் உண்மைக்கு சாட்சி எல்லோ
நின்ற இடத்தில் நின்றான் ஒருவன்
அவன் நீதிக்கு சாட்சியல்லோ
மானம் எல்லாம் இழந்து
வாழ்வதும் ஒரு வாழ்வா தமிழா

எத்தனை துன்பம் ஏன் இவன் சுமந்தான்
என்பதை நினைத்திருப்பாய்
இத்தனை வேள்வி ஏன் இவன் செய்தான்
என்பதை அறியாயோ

அந்த தத்துவ வாழ்விலே
சத்திய தியாகம் செய்தவன் தியாகம்
எப்பவும் சாவதில்லை
மானம் எல்லாம் இழந்து
வாழ்வதும் ஒரு வாழ்வா தமிழா.

பா.உதயன்

ஆசிரியர்