யார் அந்த குரல் வண்ணன் | முல்லையின் ஹர்வி

எங்கிருந்தோ
ஒரு கீத ஒலி
இசைத்துக் கொண்டிருக்கிறது

ரீங்கார வண்டுகளின் இரைச்சலை
விட அதி அற்புத ராகமுமாக,

நீல வானிலே மேவும்
வானம் பாடியின் குரலையும்.

காலையிலே இன்னிசை பாடும்
கூவு குயிலையும்

துயில் மீட்கும் சிவந்த கொண்டைச் சேவலின்
பாவையும் மிஞ்சும் அளவில்

அத்தனை தாளங்களும் இணைந்த
ஸ்வர வரிசையின் கோர்வையாக

வீணைகளின் நாதங்கள் தோற்றுப் போகும்
மகரந்தப் பாடல் போல,

கணுக் காலனியும் முத்துச் சதங்கைகளின்
சத்தத்திற்கும் மேலானதாக,

செவி தீண்டும் கோயில் மணி
ஓசையைக் கூட மெய்
மறக்க வைப்பதாக,

ஓ…… நிசப்தம் !!!

அந்தோ மீண்டும் அதே ஓசை !!!!!!

இதழூடே கீழ் ஒழுகும்,
தேன் துளியை பருக மறந்து
அதே பாட்டை இரசித்துக் கொண்டிருக்கிறது
ஓர் தேன் சிட்டு!!!

மீண்டும் ஒரு நிசப்தம்

யார் அந்த குரல் வண்ணன்
வினவியது சிட்டு ????

வேறேதும் இல்லை
என் வீட்டு முற்றத்தின்
மல்லிகைச் செடியின்
மகரந்தப் பாட்டு அது !!!!

முல்லையின் ஹர்வி

ஆசிரியர்