செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் நாகரி | தேன்மொழிதாஸ்

நாகரி | தேன்மொழிதாஸ்

0 minutes read

•
பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய
பாம்பு ஒன்றை கனவில் கண்டேன்
அது தன் நாவில் காலத்தின்
அடையாளத்தை நாணயத்தில் உமிழ்ந்தது
நாணயம் அக்காலத்து அரசனை செம்பாக வெளித்தள்ளியது
அரசனின் கை வாள் நெருப்பாய் சுழன்றது
உரையோ உறைந்த மலை உச்சியானது
சுழன்ற வாள்
நதியின் ரேகையை கனவெங்கும் இழுத்து வந்தது
நதியின் ரேகைகள் கிளை பிரிந்து பாய்ந்தன
நதிகள் பாம்பாயின
பாம்புகளின் தோல்கள் பாறைகளாகின
பாறைகள் பச்சை நிறமேறின
பச்சை பேசின
நெல்மணிகளாகின
நெல்மணிகள் யாவும் தாழிக்குள் புகுந்தன
தாழிகள் கடக்க முடியாத சதைகளாகின
காலத்தின் சதைகளோ சிவந்தன
சிவப்பு நேர்கோடாகின
நேர் கோடு ஒன்று வளைந்தது
வளைந்த கோடு வெண் நாகமாகி நின்றது
நாகத்தின் கண்களில் இரண்டு
அரசிகள் பறந்து வந்தனர்
அவர்கள் நிலத்தை ஊதி சீராக்குகையில்
நாகத்தின் வால் – நட்சத்திரமானது
நாகத்தின் எலும்புகள் நகரங்களாகின
•

தேன்மொழிதாஸ்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.