செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் நிசங்களின் பாசறை | த. செல்வா

நிசங்களின் பாசறை | த. செல்வா

0 minutes read

எந்தப் பாசறையில் நிசத்தை தேடுவது
நிசம் நிழலின் கீழ் ஒளிந்துள்ளதா
அல்லது நிழலின் ஆடையைக் கழற்றி தன்னை உணர்த்துகிறதா

இரு கைகள் மோதுகையில் சத்தம் வருவது போல்
இருமனது மோதுகையில் யுத்தம் வருகிறது
பிறகு இன்னொன்று பூக்கிறது

பாசறைப் பாடல்களைப் பாடுகையில்
கார்த்திகையை விரித்து வைத்து
தொலையுண்ட தூயத்தின்
தீபக் கதைகளை
பாடச் சொல்கிறது மனம்

மருதாணி தடவிய அழகிய விரல்களில்
துப்பாக்கி சிரிக்கும் பாசறைகள் நமது
பூக்கள் தரித்த அழகிய கூந்தலில்
வேட்கை பூப்பது நமது
மென்மை நெஞ்சின் நரம்புக் கணுக்களில் குப்பி சிரிப்பது நமது
பட்சிகள் மேயும் கானக மரங்களில்
கந்தகம் பூசுவது நமது

இப்படியானவோர் காலத்தின் தெருக்களில்
நம்மைத் தொடரும் நிழல்களில்
நிசங்களைத் தேடுகையில்
வடிந்தோடும் வரலாற்றின் சொட்டுகளைக் கொண்டு
கவி மொட்டவிழ்க்காமல் இருக்க முடியவில்லை

உண்மையில்
நிசமென்பது என்ன
வாழ்ந்தவையா
வாழப்போவனவா
வாழ்ந்து கொண்டிருப்பனவா

த.செல்வா
மாலை 3.36
இரணைமடு

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.