Wednesday, April 24, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் நந்திக்கடலோன்! | நோர்வே வசீகரன்

நந்திக்கடலோன்! | நோர்வே வசீகரன்

1 minutes read

நவீன நாடகம் ஆடிய
இலக்கியக் கூத்தர்களின்
இலத்திரனியல்
முகமூடி கிழிந்துபோனது!

முள்ளிவாய்கால் முற்றத்தில்
சூரியன் வீழ்ந்தது என்று
நடுநிலை நாக்குகள்
குரைக்கின்றன!

அவர்கள் சொல்கிறார்கள்
இல்லை இல்லை
சூரியன் உயிரோடுதான்
சுற்றிவருகிறான்!

இவர்கள் சொல்கிறார்கள்
இல்லை இல்லை
அன்றே
சூரியன் உயிர்பிரிந்தது என்று!

நாங்கள் சொல்கிறோம்
தினம் தினம்
சூரியன் உதித்துக்கொண்டே
இருக்கின்றது என்று!

நந்திக் கடலுக்குத் தெரியும்
சூரியன் எழுதிய வரலாற்றுக்கு
இறுதி மரியாதை செய்து
ஒருவரும்
விளக்கேற்றத் தேவையில்லை என்று!

அவனே விளக்கு
அவனே வடக்கு
அவனே கிழக்கு
அவனே வெளிச்சம்!

-வசீகரன்
16.02.2023
லில்லகாமர், நோர்வே

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More