செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home மருத்துவம் பிரசவத்திற்கு பின் ஓமம் நீர் குடித்தால் தீரும் பிரச்சனைகள்

பிரசவத்திற்கு பின் ஓமம் நீர் குடித்தால் தீரும் பிரச்சனைகள்

2 minutes read

குழந்தைப் பேறு பெற்ற பெண்களுக்கும் ஒரு பொதுவான பிரச்சனை உள்ளது. அது உடல் எடை அதிகரிப்பது தான். குழந்தை பிறந்த பிறகும் ஒரு பெண் தான் அழகாகவும் நல்ல உடல்வாகோடும் தோன்ற வேண்டும் என்று நினைப்பதில் தவறு இல்லை. எனினும் அதிக பெண்கள் தங்களது உடலின் அழகிய மற்றும் ஒல்லியான உடல் தோற்றத்தைப் பிரசவத்திற்குப் பின் இழந்து விடுகிறார்கள். இது இயல்பே என்றாலும், பலர் அத்தகைய உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்று தீர்மானமாக இருப்பார்கள். பிரசவத்திற்குப் பின் உங்கள் உடல் எடையைக் குறைக்க ஓமம் நீரைப் பயன்படுத்துவது ஒரு ஆரோக்கியமான முறையாகும். சத்தான உணவோடும், போதிய உடற்பயிற்சியோடும் நீங்கள் இந்த ஓமம் நீரைத் தினமும் பருகி வந்தால் உங்கள் உடல் எடை நிச்சயம் குறையும்.

பிரசவத்திற்குப் பின் பெண்கள் ஓமம் நீரைப் பருகி வந்தால் தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும். இதனால் உங்கள் குழந்தைக்குப் போதுமான தாய்ப்பால் கொடுக்க முடியும். ஓமம் இயற்கையான வழியில் தாய்ப்பால் சுரப்பதற்கு உதவுகிறது.

ஓமம் நீர் உங்கள் உடல் வலியைக் குறைக்க உதவும். குழந்தைப் பேறு பெற்ற பெண்கள் அதிக பட்சமான உடல் வலியாலும், மூட்டு வலியாலும் அவதிப்பட நேரிடும்.எத்தனையோ மருந்து மாத்திரைகளுக்கும் கட்டுப்படாத வலி கூட ஓமம் நீருக்கு அடங்குகிறது என்பது மிகையல்ல.ஆக இந்த ஓமம் நீரைப் பருகி வந்தால் உங்கள் உடல் வலி மற்றும் மூட்டு வலி குறையும்.

ஓமம் நீர் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். இதனால் உங்கள் உடல் விரைவில் முழுத் தெம்பைப் பெறும்.கூடுதலாக நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிப்பதால் சளி, சுரம் போன்ற எந்த உபாதைகளும் தாய் மற்றும் சேய்க்கு வராது தடுக்கப்படுகின்றன.நீங்கள் தொற்று வியாதிகளிலிருந்து தப்பிக்க ஓமம் நீர் அருந்துவது ஒரு எளிய மட்டும் சிறந்த வழி!

பிரசவத்திற்குப் பின் பெண்களுக்கு வாய்வுப் பிரச்சனைகள் ஏற்படுவது இயல்பு. ஆக இந்த ஓமம் நீரைப் பருகும் போது அத்தகைய வாய்வுப் பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்க வழி வகை செய்யும். ஏன் பெண்களுக்கு மட்டும் அல்ல, குழந்தைகளுக்கு ஏற்படும் வாய்ப்புத் தொல்லைகளும் இந்நீரால் நிவர்த்தி செய்யப்படுகிறது.

பெண்களுக்குப் பிரசவத்திற்குப் பின் மலச் சிக்கல் அல்லது பேதி போன்ற வயிறு சம்பந்தப்பட்ட உடல் நலப் பிரச்சனைகள் ஏற்படுவது வழக்கம்.இத்தகைய உடல் உபாதைகள் ஏற்படாமல் இருக்க இந்த ஓமம் நீர் பெரிதும் உதவுகிறது.இவ்வகை உடல்நிலை சீர்க் கேடுகளை நீங்கள் மருந்து எதுவும் எடுத்துக் கொள்ளாமல் இந்த ஓமம் நீரைத் தினமும் பருகியே சரி செய்து விடலாம். இதை விட ஒரு நல்ல வீட்டு வைத்தியம் வேறு எதுவும் இருக்க முடியாது.

பல பெண்களுக்குச் சீரற்ற மாதவிடாய் தொந்தரவு இருக்கிறது. குறிப்பாகப் பிரசவத்திற்குப் பின் பல பெண்களுக்கு மாதவிடாய் சரியாக ஏற்படுவதில்லை.இதற்காக அவர்கள் பல மாத்திரைகளை உண்டு பல்வேறு பக்க விளைவுகளுக்கு ஆளாகின்றனர்.அவர்கள் அனைவரும் இந்த ஓமம் நீரின் அருமை பெருமைகளைச் சற்று கூர்ந்து நோக்க வேண்டும்.சீரான மாதவிடாய் ஏற்பட இந்த ஓமம் நீர்ப் பெரிதும் உதவுகிறது. இந்த ஓமம் நீரைத் தொடர்ந்து பருகி வர அனைத்து மாதவிடாய் பிரச்சனைகள் சரியாகும்.

சரியாகச் செரிமானம் ஆகாததால்,ஒரு சிலருக்குக் கல்லீரல் மற்றும் சிறுநீரகம் சீராகச் செயல் படாமல் போக வாய்ப்புள்ளது.அந்த சமயத்தில் கல்லீரல் மற்றும் சிறுநீரகம் சீராகச் செயல் பட வழி வகை செய்ய, இந்த ஓமம் நீர்ப் பெரிதும் உதவுகிறது. ஆக நீங்கள் இந்த நீரைத் தினமும் பருகி வரும் போது செரிமானம் தொடர்பான பிரச்சனைகள் பூரணமாகக் குணமாகும்.

நன்றி-மாலை மலர்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More